Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? - சின்னப் பூவே மெல்லப் பேசு

31 ஜூலை, 2020 - 08:27 IST
எழுத்தின் அளவு:
Marakka-Mudiyuma---chinna-poove-mella-pesu

படம் : சின்ன பூவே மெல்ல பேசு
வெளியான ஆண்டு : 1987
நடிகர்கள் : பிரபு, ராம்கி, நர்மதா, சுதா சந்திரன், சபிதா ஆனந்த்
இயக்கம் : ராபர்ட் - ராஜசேகர்
தயாரிப்பு : ராஜகோபால்

இளையராஜாவின் இசை சூழ்ந்திருந்த நேரத்தில், புதியவர்களும் அவ்வப்போது தேன்மழை தந்தனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான், எஸ்.ஏ.ராஜ்குமார். பாலைவனச்சோலை போன்ற அற்புதமான படங்களை கொடுத்த, ராபர்ட் - ராஜசேகர் ஜோடி, பிரபு தவிர, மற்ற அனைவரும், புதுமுகங்களுடன் களமிறங்கிய படம், சின்ன பூவே மெல்ல பேசு.

ஒரு நட்சத்திர ஓட்டலின் வாத்தியக் கலைஞராக இருந்த, எஸ்.ஏ.ராஜ்குமார். இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். திரைப்படக் கல்லுாரியில் நடிப்புப் பயிற்சியில், பட்டயச் சான்று பெற்ற ராம்கி, ஹீரோவாக களமிறங்கினார். ஹீரோயின் நர்மதாவும், இதில் தான் அறிமுகம். பிரபுவும், சபிதா ஆனந்தும் கல்லுாரியில் காதலிப்பர். இதை அறிந்த, சபிதாவின் தந்தை செந்தாமரை, காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பார். இதனால், சபிதா பலியாவார். பிரபு, விரக்தியில் திரிவார்.

இந்நிலையில், அதே கல்லுாரியில் படிக்கும், சபிதாவின் தங்கையும், ராம்கியும் காதலிப்பர். இப்போது, அவர்களின் காதலை, பிரபு சேர்த்து வைப்பார் என்பது தான் கதை. எளிமையான கதை; ஆனால், இளமையாக இருந்தது. அதனால் படம், வெள்ளி கண்டது!

இப்படத்தில் இடம்பெற்ற ஏழு பாடல்களுமே, ஹிட் ஆகி, படத்தின் வெற்றிக்கும், எஸ்.ஏ.ராஜ்குமார் திரை பயணத்திற்கும் பெரும் துணை புரிந்தன. இதில் குறிப்பிடத்தக்க விஷயம், படத்தின் அனைத்து பாடல்களையும், எஸ்.ஏ.ராஜ்குமார் தான் எழுதினார். தமிழ் சினிமா வரலாற்றில், ஒரு படத்தின், அனைத்துப் பாடல்களையும் எழுதி, இசையமைத்த பெருமை, டி.ராஜேந்தருக்கு பின், இவரையே சாரும். சின்ன பூவே மெல்ல பேசு, சங்கீத வானில், ஏ புள்ள கருப்பாயி... போன்ற பாடல்கள் காற்றில் தவழ்ந்து கொண்டே இருக்கின்றன!

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - மனிதன்மறக்க முடியுமா? - மனிதன் மறக்க முடியுமா? - நாயகன் மறக்க முடியுமா? - நாயகன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

31 ஜூலை, 2020 - 10:17 Report Abuse
Kumar,Toronto Most underrated music director of the Tamil cinema is S.A rajkumar.. Awesome music director.. Respect you sir
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in