Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? - மனிதன்

31 ஜூலை, 2020 - 08:09 IST
எழுத்தின் அளவு:
Marakka-Mudiyuma---Manithan

படம்: மனிதன்
வெளியான ஆண்டு : 1987
நடிகர்கள் : ரஜினி, ரூபிணி, ரகுவரன், ஸ்ரீவித்யா
இயக்கம் : எஸ்.பி.முத்துராமன்
தயாரிப்பு : ஏ.வி.எம்.,

'அமாவாசை அன்று பிறப்பவன் திருடனாகத் தான் இருப்பான்' என்ற மூடநம்பிக்கைக்கு எதிராக உருவான படம், மனிதன். ஏ.வி.எம்., தயாரிப்பு, எஸ்.பி.முத்துராமன் இயக்கம், நடிகர் ரஜினி என, மூன்று மசாலாக்களும் இணைந்து, ரசிகர்களுக்கு திகட்டாத பிரியாணியை படைத்தது. வி.சி.குகநாதன் கதைக்கு, பஞ்சு அருணாசலம் திரைக்கதை எழுதியிருந்தார். ரூபிணி, இப்படத்தின் வழியாக, தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

கடந்த, 1987 அக்., 21ம் தேதி, கமல் - மணிரத்னம் கூட்டணியில், நாயகன் படமும்; ரஜினி - எஸ்.பி.முத்துராமன் கூட்டணியில், மனிதன் படமும் வெளியாகின. விமர்சன ரீதியாக, நாயகன் வெற்றி பெற்றாலும், ரசிகர்களால், மனிதன் கொண்டாடப்பட்டான். இப்படம், 175 நாட்கள் ஓடியது.

சந்திரபோஸ் இசையில், 'மனிதன், காளை காளை, வானத்தை பார்த்தேன்...' போன்ற பாடல்கள், பெரும் வரவேற்பை பெற்றன. 'மனிதன் மனிதன் எவன் தான் மனிதன்...' என்ற பாடல், படத்தில் இடம் பெறவில்லை. ரஜினிக்கு மிகவும் பிடித்ததால், படத்தின் டைட்டிலில், இப்பாடல் சேர்க்கப்பட்டது. படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி, குகையில் நடக்கும். இதற்காக, சென்னை, பூந்தமல்லி அருகில் உள்ள, செங்கல் சூளைகள் பயன்படுத்தப்பட்டன. இந்த சண்டையில் தான், ரஜினி, கவச உடை அணிவது, வெடிகுண்டுகளை சட்டையில் மாட்டுவது, ஜிப் போடுவது, வெடிகுண்டை பிடித்து, திரும்ப வீசுவது என, 'ஆக் ஷனில்' அசத்தியிருப்பார். கிளைமேக்ஸ் காட்சிக்கு, தியேட்டரில், ரசிகர்களின் கைதட்டல் விண்ணைத் தொட்டது!

இப்படத்தின் வெற்றி விழாவில், கண் தானம் குறித்து, ரஜினி விழிப்புணர்வு செய்தார். அதன் பின், கண் தானம் பற்றி, அனைவருக்கும் தெரிய வந்தது. ரஜினியின், மனிதன்!

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - எங்க சின்ன ராசாமறக்க முடியுமா? - எங்க சின்ன ராசா மறக்க முடியுமா? - சின்னப் பூவே மெல்லப் பேசு மறக்க முடியுமா? - சின்னப் பூவே ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

senthil raja a - Varanasi,இந்தியா
31 ஜூலை, 2020 - 12:09 Report Abuse
senthil raja a A mega film in the career of Thalaiva. I remember watching this film in a tent theatre, with a ticket cost of just two rupees. Thanks for this article that kindled the very old but golden memories of the past.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in