Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? - எங்க சின்ன ராசா

29 ஜூலை, 2020 - 19:16 IST
எழுத்தின் அளவு:
Marakka-Mudiyuma-:-Enga-chinna-Rasa

படம் : எங்க சின்ன ராசா
வெளியான ஆண்டு : 1987
நடிகர்கள் : பாக்யராஜ், ராதா, சி.ஆர்.சரஸ்வதி
இயக்கம் : பாக்யராஜ்
தயாரிப்பு : எஸ்.ஏ.ராஜ்கண்ணு

தந்தையின் இரண்டாவது மனைவியின் மேல் அளவு கடந்த அன்பு வைத்திருக்கும் வெள்ளந்தியான ஹீரோ. இவரை அடிமையாக நடத்தி, சொத்துக்களை, சித்தி ஆளுகிறாள். இந்நிலையில், சந்தர்பவசத்தால், படித்த, புத்திசாலி பெண், ஹீரோவிற்கு மனைவியாக வருகிறாள். நயவஞ்சக சித்தியிடம் சிக்கியுள்ள தன் கணவரை, அந்த பெண் எப்படி புத்திசாலித்தனமாக மீட்கிறாள் என்பது தான், கதை.

இது, கன்னட நாவல் என்கின்றனர். இல்லைல்லை, 1969ல், புட்டண்ணா கனகல் இயக்கத்தில், ராஜ்குமாரும், சரோஜாதேவியும் நடித்த படத்தின், கதை என்கின்றனர். ஜிதேந்திரா,- ஹேமமாலினி நடித்து, ஹிந்தியில், 1981ல் வெளியான, ஜோதி படத்தின், கதை என்ற பட்டிமன்றமும் நடக்கிறது.

சரி... நம் தமிழில், பாக்யராஜ் இயக்கத்தில், எங்க சின்ன ராசா என்ற பெயரிலும், இதே கதை படமாக்கப்பட்டு, அதிரிபுதிரி ஹிட் அடித்தது. இதே கதை, ஹிந்தியில், அனில்கபூர், மாதுரி தீக்ஷித் நடிப்பில், பேட்டா என்றும்; தெலுங்கில், வெங்கடேஷ், மீனா நடிப்பில், அப்பாய்காரு என்றும்; கன்னடத்தில், ரவிச்சந்திரன்,- மதுபாலா நடிப்பில், அன்னய்யா என்றும் திரைப்படமானது. ஒரே கதை, எத்தனை முறை சுட்டாலும், வெற்றிக்கு உத்திரவாதம். எனவே, சுட்டுக்கொண்டே இருக்கிறார்கள்...

எங்க சின்ன ராசா படத்தில், வெகுளியான ஹீரோவாக, பாக்யராஜும்; அவரின் மனைவியாக, ராதாவும் நடித்திருப்பர். நயவஞ்சக சித்தியாக, சி.ஆர்.சரஸ்வதி அசத்தியிருப்பார்.

'கொண்டச் சேவல், மாமா உனக்கொரு துாதுவிட்டேன், நான் தந்தனத்தான் பாட்டு, எடுடா மேளம் அடிடா தாளம்... ' போன்ற பாடல்கள், மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இப்படத்தின் பாடல்களை கேட்டதும், இசை, இளையராஜா என்றே பலரும் கூறுவர். ஆனால், இசையமைத்தது, சங்கர் -- கணேஷ்!

எங்கேயோ உருவாகிக்கொண்டே இருக்கிறான், எங்க சின்ன ராசா!

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - எங்க ஊரு பாட்டுக்காரன்மறக்க முடியுமா? - எங்க ஊரு ... மறக்க முடியுமா? - மனிதன் மறக்க முடியுமா? - மனிதன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in