Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? - சம்சாரம் அது மின்சாரம்

23 ஜூலை, 2020 - 20:01 IST
எழுத்தின் அளவு:
Marakka-Mudiyuma-:-Samsaram-Adhu-Minsaram

படம்: சம்சாரம் அது மின்சாரம்
வெளியான ஆண்டு : 1986
நடிகர்கள் : லட்சுமி, ரகுவரன், விசு, மனோரமா
இயக்குனர் : விசு
தயாரிப்பு : ஏ.வி.எம்.,

தமிழ் திரை வரலாற்றில், சம்சாரம் அது மின்சாரம் படம் ஏற்படுத்திய தாக்கம், மிகப் பெரியது. மிக குறைந்த பட்ஜெட்டில் தயாராகி, மிகப் பெரிய வசூல் மழையில் நனைந்தது. இப்படம், 41 நாட்களில் எடுத்து முடிக்கப்பட்டது.

அப்பா, மகனுக்கு இடையே நடக்கும் பொருளாதார பிரச்னை தான், கதையின் அடிநாதம். அதில், வித்தை காட்டி, மயக்கியிருப்பார் விசு. படத்தின் வெற்றிக்கு, திரைக்கதை தான் முக்கியம் என்பதை உணர்த்திய படம். ஆம்... உறவுக்கு கை கொடுப்போம் என்ற படத்தின் கதையும், இது தான். ஆனால் திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாததால், அந்த படம் தோல்வியை தழுவியது. திரைக்கதையால், சம்சாரம் அது மின்சாரம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.

மனோரமா இல்லையென்றால், படமே இல்லை எனும் அளவிற்கு, கண்ணம்மா கதாபாத்திரத்தை உச்சத்தில் துாக்கி நிறுத்தி இருப்பார். இப்படத்தின் தெலுங்கு பதிப்பில், சவுகார் ஜானகி நடித்திருப்பார். படத்தின் கதை நாயகி, லட்சுமி. நம் வீட்டில் இப்படியொரு மருமகள் இல்லையே என, பெற்றோரை ஏங்க வைத்துவிடுவர்.

பெண் பார்க்கும் காட்சியும், கிஷ்மு - மனோரமா நாடக காட்சியும், நினைத்தாலே புன்னகையை வரவழைக்கும். லட்சுமி, விசு, மனோரமா இவர்களை விட, படத்தின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணம், அந்த வீடு. இதனால், ஏ.வி.எம்., ஸ்டீயோவில், செட் அமைக்கப்பட்டது. படத்தின் வழியாக வசூல் அள்ளியதற்கு ஈடாக, இந்த வீடும், பல படங்களில் இடம்பெற்று, வருவாய் ஈட்டியது.

சங்கர் -- கணேஷ் இசையில், பாடல்கள் வெற்றி பெற்றன. ஜனாதிபதியின் தங்கதாமரை விருது, இப்படத்திற்கு கிடைத்தது. ஏ.வி.எம்., வரலாற்றில், சம்சாரம் அது மின்சாரம் என்பது, பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது!

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? -  புன்னகை மன்னன்மறக்க முடியுமா? - புன்னகை மன்னன் மறக்க முடியுமா? - மெல்லத் திறந்தது கதவு மறக்க முடியுமா? - மெல்லத் திறந்தது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in