Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? - ஊமை விழிகள்

19 ஜூலை, 2020 - 18:56 IST
எழுத்தின் அளவு:
Marakka-Mudiyuma-:-Oomaivizhigal

படம்: ஊமை விழிகள்
வெளியான ஆண்டு : 1986
நடிகர்கள் : விஜயகாந்த், அருண் பாண்டியன், கார்த்திக், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன்
இயக்கம் : அரவிந்தராஜ்
தயாரிப்பு : ஆபாவாணன்

திரைப்படக் கல்லுாரி மாணவர்களின் பெருமை மிகு அடையாளம், ஊமை விழிகள்! காதல் மற்றும் 'ரீமேக்' படங்கள் என, சுழன்ற தமிழ் சினிமாவை, 'சஸ்பென்ஸ் திரில்லர்' பக்கம் திசை திருப்பிய படம், ஊமை விழிகள்.

'சினிமாஸ்கோப்' தொழில் நுட்பத்தில் எடுத்த, சிவாஜி நடித்த, ராஜ ராஜ சோழன் படமும், ரஜினி, கமல் நடித்த, அலாவுதீனும் அற்புத விளக்கும் திரைப்படமும், படுதோல்வி அடைந்தன. அதனால், சினிமாஸ்கோப் என்றாலே, சினிமாத்துறையினர் பீதியாகினர். அதை உடைத்தெறிந்த படம், ஊமை விழிகள்!

திரைப்படக் கல்லுாரி மாணவர்களுக்காக, ஊதியம் வாங்காமலும், வயதான தோற்றத்திலும் நடித்தார் விஜயகாந்த். குறும்படமாக எடுத்து, அதை விரிவுப்படுத்தி, சினிமாவாக எடுத்தனர். ஆபாவாணன் திரைக்கதை, பாடல்கள், வசனம் எழுதி, தயாரித்தார். ஒரு இளைஞன், அழகான கண்கள் உடைய பெண்ணைக் காதலிக்கிறான்; அவள் ஏமாற்றி விடுகிறாள். அதன் பின், பழிவாங்கும் படலமாக, அழகான பெண்களின் கண்களை, அவன் பறிக்கிறான் என்பது தான், ஊமை விழிகள் கதை.

இப்படத்தை பார்த்த தணிக்கை குழு, தடை சொல்லிவிட்டது. டில்லி வரை சென்று போராடி, தணிக்கை சான்றிதழ் பெற்று, படம் வெளியானது. சஸ்பென்ஸ், திரில்லர் படத்திற்கு ஒளிப்பதிவு தான், மிக முக்கியம். அதை, முதல் படத்திலேயே சிறப்பாக கொடுத்திருந்தார், ரமேஷ்குமார்.

மனோஜ் - கியான் என்ற இரட்டையர் இசையில், 'தோல்வி நிலையென நினைத்தால், மாமரத்து பூவெடுத்து, நிலைமாறும் உலகில், ராத்திரி நேரத்து பூஜையில், கண்மணி நில்லு காரணம்...' போன்ற பாடல்கள், பெரும் வெற்றியை பெற்றன.

ஊமை விழிகள், அது ஒரு வரலாறு!

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? -  அம்மன் கோவில் கிழக்காலேமறக்க முடியுமா? - அம்மன் கோவில் ... மறக்க முடியுமா? - கடலோர கவிதைகள் மறக்க முடியுமா? - கடலோர கவிதைகள்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

rajakumar - London,யுனைடெட் கிங்டம்
20 ஜூலை, 2020 - 10:53 Report Abuse
rajakumar எதை வைத்து ரஜினி கமல் படம் தோல்வின்னு நீ சொல்லுவா. நியூஸ் வாசிக்கிறவன் எல்லோரும் கிருகன்னு நினைச்சியா.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in