Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? - சின்ன வீடு

12 ஜூலை, 2020 - 15:17 IST
எழுத்தின் அளவு:
Marakka-Mudiyuma---Chinna-Veedu

படம்: சின்ன வீடு
வெளியான ஆண்டு: 1985
நடிகர்கள்: கே.பாக்யராஜ், கல்பனா, அனு
இயக்கம்: கே.பாக்யராஜ்
தயாரிப்பு: சி.கே.கண்ணன்

தமிழ் திரைப்படங்களில், முதல் பெண் ஒளிப்பதிவாளராக, பி.ஆர்.விஜயலட்சுமி அறிமுகமான படம் சின்ன வீடு. கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி, கதாநாயகனாக நடித்திருந்தார் கே.பாக்யராஜ். நடிகை ஊர்வசியின் சகோதரி, கல்பனா, இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தன், 23வது வயதில், பாக்யராஜின் தாயாக, வயதானத் தோற்றத்தில், கோவை வட்டார வழக்கில் பேசிச் சிறப்பாக நடித்து, பெரும் பாரட்டைப் பெற்றார், கோவை சரளா. டி.ராஜேந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட அனு, இப்படத்திற்கு பின், 'சின்னவீடு' அனு என்றழைக்கப்பட்டார்.

அழகான மனைவியை எதிர்பார்க்கும் நாயகனுக்கு, அதற்கு எதிராக, பெண் அமைந்துவிடும். இதனால், வேறொரு பெண்ணின் வலையில், சிக்கிக்கொள்வார். அவரை மீட்கும், மனைவியின் சாமர்த்தியம் தான், படத்தின் கதைக்களம்.

கே.பாக்யராஜ் படங்கள் என்றாலே, 'அந்த மாதிரி சமாச்சாரம்' கதைக்களம் இருக்கும். அதில் விரசம் அதிகமாகாமல், பெண்களும் ரசிக்கும் வகையில் படத்தை தருவது தான், அவரின் பலம். அவ்வகையில், சின்ன வீடு படமும் ஒன்று. படம், வசூலை வாரி குவித்தது.

மச்சானிடம், ஆங்கிலத்தில் பேசி சிக்கிக் கொள்வது, மாமனாரிடம் ஸ்கூட்டர் வாங்குவது, அலுவலகத்திற்கு வரும் மதிய உணவு போன்ற காட்சிகள், ரசிகர்களை விலாநோக சிரிக்க வைத்தன. இளையராஜாவில் இசையில், 'ஜாக்கிரத ஜாக்கிரத, வெள்ள மனம் உள்ள மச்சான், சிட்டுக்குருவி...' உள்ளிட்ட பாடல்கள் வெற்றி பெற்றன. இப்படம், ஏ.வி.எம்., தயாரிப்பில் உருவாக இருந்தது. சில காரணங்களால், சின்ன வீடு ஒதுக்கப்பட்டு, முந்தானை முடிச்சு உருவானதாம். அதன் பின், இப்படத்தை, கே.பாக்யராஜ் இயக்கினாராம்.

சபல ஆசாமிகளுக்கு பாடம் கற்றுக்கொடுத்தது சின்ன வீடு!

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? -  முதல் மரியாதைமறக்க முடியுமா? - முதல் மரியாதை மறக்க முடியுமா? - சிந்து பைரவி மறக்க முடியுமா? - சிந்து பைரவி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

13 ஜூலை, 2020 - 17:19 Report Abuse
RS PRAKASH Great movie
Rate this:
13 ஜூலை, 2020 - 11:33 Report Abuse
ilaiyaraja muthu கேவலமான படம்..... மறக்க முடியுமா லிஸ்ட் ல இந்த படத்த சேர்க்காதீர்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in