Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? - ஆண்பாவம்

08 ஜூலை, 2020 - 12:30 IST
எழுத்தின் அளவு:
Marakka-Mudiyuma---Aanpaavam

படம்: ஆண்பாவம்
வெளியான ஆண்டு : 1985
நடிகர்கள் : பாண்டியன், பாண்டியராஜன், ரேவதி, சீதா, வி.கே.ராமசாமி, ஜனகராஜ்
இயக்கம் : பாண்டியராஜன்
தயாரிப்பு : அலமு மூவீஸ்

வயிறு வலிக்க சிரிக்க வேண்டுமா... ஆண் பாவம் பாருங்கள்! ஆர்.பாண்டியராஜன், இரண்டாவதாக இயக்கிய படம், ஆண்பாவம். வெள்ளி விழாக் கண்ட படம் இது. கிராமத்தில், தியேட்டர் கட்டியிருக்கும், வி.கே.ராமசாமியின் மகன்கள் பெரிய பாண்டி, சின்ன பாண்டி. திருமணத்திற்கு பெண் பார்க்க செல்லும், பெரிய பாண்டி, ஊர் மாறி சென்று, வேறு பெண்ணை பார்த்து, அவள் மேல் காதல் கொள்ள, அதைத் தொடர்ந்து நிகழும் சிக்கல்களை, நகைச்சுவை பட்டாசு வெடிக்க, வெளிகாட்டியப் படமே ஆண்பாவம்.

தியேட்டரில் யார் டிக்கெட் கொடுப்பது, சிகரெட் அடிப்பது என, அண்ணன் - தம்பி கலாட்டா, ரசிகர்களை ஆர்ப்பரிக்க செய்தது. பாண்டியன், பாண்டியராஜன் என, இரண்டு ஹீரோக்கள் இருந்தாலும் வி.கே.ராமசாமி தான், பட்டையை கிளப்பியிருப்பார். 'மூதேவி, அதாவது பாருங்க...' என, அவரின் குரலும் நடித்திருக்கும். கிராமத்து பாடலோடு இருக்கும், கொல்லங்குடி கருப்பாயி, ஓட்டல் நடத்தும் ஜனகராஜ், குறும்பு பெண்ணாக ரேவதி, காதல் தேவதையாக சீதா, தவக்களையின் காமெடி என, படத்தில் அனைவருக்கும், பங்கு இருக்கும்.

இப்படத்தை எத்தனை ஆண்டுகளுக்கு முன் பார்த்தாலும், இப்போது, 'கார் முட்டியிருச்சான்னு பாரு; உங்க அம்மாவை நான் கட்டிக்க கூடாதா; கோவில் கட்டினேன் ஒருத்தரும் வரலை' என்ற, 'டயலாக்' கேட்டாலே, அந்த காட்சி நினைவுக்கு வந்து, முகத்தில் சிரிப்பும் வெளிவரும். அது தான், பாண்டியராஜன்!

இளையராஜாவின் இசையில், 'காதல் கசக்குதய்யா, குயிலே குயிலே பூங்குயிலே...' போன்ற பாடல்கள் சிறப்பாக அமைந்து இருந்தாலும், பின்னணியில் தான் மனிதர் அசத்தியிருப்பார். சிரித்து சிரித்து கண்ணீர் வரும், ஆண் பாவம்!

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? -  துாங்காதே தம்பி துாங்காதேமறக்க முடியுமா? - துாங்காதே தம்பி ... மறக்க முடியுமா? -  ஒரு கைதியின் டைரி மறக்க முடியுமா? - ஒரு கைதியின் டைரி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in