Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? - மலையூர் மம்பட்டியான்

25 ஜூன், 2020 - 13:59 IST
எழுத்தின் அளவு:
Marakka-Mudiyuma---Malaiyur-mambattiyan

படம்: மலையூர் மம்பட்டியான்
வெளியான ஆண்டு: 1983
நடிகர்கள்: தியாகராஜன், சரிதா, கவுண்டமணி, செந்தாமரை, சில்க் ஸ்மிதா
இயக்கம்: ராஜசேகர்
தயாரிப்பு: சிவ.ராமதாஸ்

சேலம் மாவட்டம், மேச்சேரி போலீஸ் சரகம், கொல்காரனுார் கிராமத்தைச் சேர்ந்த அய்யாத்துரை, 'மம்பட்டியான்' என்றழைக்கப்பட்டான். சந்தன கடத்தல்காரன் வீரப்பனைப்போல, 50 ஆண்டுகளுக்கு முன், போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். 27 கொள்ளைகள், ஒன்பது கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவன். ஐந்து ஆண்டு காலம், காடுகளில் தலைமறைவாக வாழ்ந்தவன். இவனது கதாபாத்திரமாக வைத்து, மலையூர் மம்பட்டியான் படம் தயாரானது.

வில்லன் கதாபாத்திரத்திற்கு, ஒரு நியாயம் கூறி, ராபின் ஹுட் கதையையும், பழிக்குப் பழி வாங்கும் கதையும் இணைந்து, திரைக்கதை அமைத்திருந்தனர்.மம்பட்டியான் கதாபாத்திரத்தில், தியாகராஜன் நடித்தார். அவரது குரல் அந்த கதாபாத்திரத்திற்கு வலுசேர்த்தது. இப்படத்திற்கு பின், 'மம்பட்டியான் தியாகராஜன்' என்றே, ரசிகர்களால், அவர் அழைக்கப்பட்டார்.

காமெடி நடிகர், கவுண்டமணி, இதில் வில்லத்தனம் காட்டியிருந்தார். சரிதா, தனக்கு வாய்ப்பு கிடைத்த இடத்தில் எல்லாம், சிறப்பாக, 'ஸ்கோர்' செய்தார். இப்படத்தை வினியோகம் செய்தது, நடிகர் கமலின், 'ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்' நிறுவனம். இப்படம், 'ஓகோ' என்று ஓடி, வசூலை வாரிக் குவித்தது. இது, 'டிரெண்ட் செட்டர்' படமாகவும் மாறியது.

இளையராஜாவின் இசையில், 'காட்டுவழி போற பொண்ணே கவலைப்படாதே' உட்பட, அனைத்து பாடல்களும் பட்டையை கிளப்பின. இப்படத்தை, தியாகராஜனின் மகன் பிரசாந்த் நடிப்பில், 2011ல், தமிழிலேயே, 'ரீமேக்' செய்யப்பட்டது. ஏனோ, படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. 'அட' என, ஆச்சரியப்பட செய்வான், மலையூர் மம்பட்டியான்!

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - மண்வாசனைமறக்க முடியுமா? - மண்வாசனை மறக்க முடியுமா? - தாவணிக்கனவுகள் மறக்க முடியுமா? - தாவணிக்கனவுகள்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Krish - Madurai,இந்தியா
25 ஜூன், 2020 - 14:50 Report Abuse
Krish தியாகராஜன் நடித்த மம்பட்டியான் படம் அருமையாகவும் இயல்பாகவும் இருந்தது. ஆனால் அவருடைய மகன் பிரசாந்த் நடித்த மம்பட்டியான் படம் படு மொக்கையாகவும் அருவையாகவும் இருந்தது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in