Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? - உயிருள்ள வரை உஷா

23 ஜூன், 2020 - 08:27 IST
எழுத்தின் அளவு:
Marakka-Mudiyuma---Uyirullavarai-usha

படம்: உயிருள்ளவரை உஷா
வெளியான ஆண்டு: 1983
நடிகர்கள்: கங்கா, நளினி, டி.ராஜேந்தர்
இயக்கம்: டி.ராஜேந்தர்
தயாரிப்பு: தஞ்சை சினி ஆர்ட்ஸ்

ஒரு தலை ராகம், ரயில் பயணங்களில் போன்ற படங்களை அடுத்து, மூன்றாவதாக, சொந்த தயாரிப்பில் களமிறங்கினார் டி.ராஜேந்தர். அவரது, தஞ்சை சினி ஆர்ட்ஸ் தயாரித்த முதல் படம் உயிருள்ளவரை உஷா.

இப்படத்தைத் தொடர்ந்து தான், ஒன்பது எழுத்துக்களில் அவரின் படங்களுக்கு தலைப்பு சூட்டத் துவங்கினார். ஒருதலை ராகம் படத்தில், இரண்டாம் நாயகியாக வந்த, உஷாவை, டி.ராஜேந்தர் காதலித்தார். அவருக்காகவே, இந்த படம் உருவானது. ஆகவே, இது காதலின் படைப்பு! உஷா, இப்போது அவரின் மனைவி.

டி.ராஜேந்தர் படம் என்றால், 'பிரமாண்ட செட்' பாடல் காட்சிகள் இடம்பெறும். அதற்கு பிள்ளையார் சுழிபோட்டதும் உயிருள்ளவரை உஷா தான். கங்கா, நளினி ஆகியோரை, இப்படத்தில் அறிமுகமானார்கள். கதையா... காதல் ஜோடியை, எதிர்ப்புகளை மீறி சேர்த்து வைக்கும், நல்ல ரவுடி; அவ்வளவு தான்! அந்த நல்ல ரவுடியாக, 'செயின் ஜெயபால்' கதாபாத்திரத்தில், டி.ராஜேந்தரே நடித்தார். படம், வெள்ளி விழா கொண்டாடியது. டி.ராஜேந்தருக்கு என, ரசிகர் படை உருவானது.

'இந்திரலோகத்து சுந்தரி, மோகம் வந்து தாகம், கட் அடிப்போம், வைகைக்கரை காற்றே நில்லு...' போன்ற பாடல்களும் பெரும் வெற்றியை பெற்றன. கல்லுாரி வாசல்களில், இப்படத்தின் பாடல்களே எதிரொலித்தன.

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, இயக்கம், தயாரிப்பு, நடிப்பு என, சினிமாவின் நவமணியாக, டி.ராஜேந்தர் உருவானார். உயிருள்ளவரை உஷா படத்தை, இப்போது பார்க்கலாம் என்றால், அதற்கு, டி.ஆரின் வெறித்தனமான ரசிகராக இருக்க வேண்டும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - மூன்று முகம்மறக்க முடியுமா? - மூன்று முகம் மறக்க முடியுமா? - மண்வாசனை மறக்க முடியுமா? - மண்வாசனை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in