Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? ரோசாப்பூ ரவிக்கைக்காரி

23 மே, 2020 - 19:00 IST
எழுத்தின் அளவு:
Marakka-Mudiyuma---Rosapoo-ravikaikari

படம்: ரோசாப்பூ ரவிக்கைக்காரி
வெளியான ஆண்டு: 1979
நடிகர்கள்: சிவகுமார், தீபா
இயக்கம்: தேவராஜ் - மோகன்
தயாரிப்பு: திருப்பூர் மணி

நடிகர், சிவகுமாரின், 100வது படம், ரோசாப்பூ ரவிக்கைக்காரி. கள்ளங் கபடமற்ற, கிராமத்து இளைஞனாக, சிவகுமார் நடித்திருந்தார். அவரின் நடிப்புக்கு பேர் சொல்லும் படங்களில், இப்படத்திற்கு முதன்மையான இடம் உண்டு. பிரசங்காட கென்டித்திம்மா என்ற கன்னட படத்தின், 'ரீமேக்' ஆகும்.

சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில், நாகரிகம் எட்டி பார்க்காத வண்டிச்சோலை என்ற கிராமம் தான், கதைக்களம். இங்கு, வெற்றிலை விற்பனை செய்யும், 'செம்பட்டை'யானாக சிவகுமார் நடித்திருந்தார். சிவகுமாருக்கும், நகரத்தில் வாழ்ந்த தீபாவிற்கும் திருமணம் நடக்கிறது. ஜாக்கெட் முதல், பவுடர் வரை, தீபா பயன்படுத்தும் அனைத்தும், அக்கிராம மக்களுக்கு புதியதாக இருக்கிறது. கிராம மக்கள், நாகரிகம் என்ற மாயவலைக்குள் விழ துவங்குகின்றனர். இதற்கிடையில், தீபாவிற்கு, வேறொரு ஆணுடன் தொடர்பு ஏற்பட, அதனால் நிகழும் துயரங்களே கிளைமேக்ஸ்!

சிறிய குன்றுகள், அழகான வயல்கள், தெளிந்த நீரோடையும் உள்ள, பசுமையான வண்டிச்சோலை கிராமத்தை, அப்படியே ஒளிப்பதிவு செய்தவர், பிரசாத். வண்டிச்சோலை கிராமத்தை, வண்ணச் சோலையாகப் படைத்திருந்தார். இளையராஜா இசையில், புலமைப்பித்தன் மற்றும் கங்கை அமரன் ஆகியோர் பாடல்களை எழுதினர். 'வெத்தல வெத்தல, மாமன் ஒருநாள் மல்லிகப்பூ, உச்சி வகுந்தெடுத்து...' போன்ற பாடல்கள் பெரும் வெற்றி பெற்றன.

போலியான நாகரிகம் எப்படி, கிராமத்தின் வாழ்க்கை முறையை தடம் புரட்டுகிறது என்பதை, நெற்றி பொட்டில் அடித்தாற்போல சொல்லியிருப்பர். தமிழ் சினிமாவின் மறக்க முடியுமா பட்டியலில், தணிக்கை குழுவில், 'ஏ' சான்றிதழ் பெற்ற, ரோசாப்பூ ரவிக்கைக்காரியும் உட்கார்ந்து இருக்கிறாள்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? -  நினைத்தாலே இனிக்கும்மறக்க முடியுமா? - நினைத்தாலே ... மறக்க முடியுமா? பசி மறக்க முடியுமா? பசி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Shekar Raghavan - muscat,ஓமன்
24 மே, 2020 - 10:54 Report Abuse
Shekar Raghavan விஜய் அல்லது சேதுபதி
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
24 மே, 2020 - 07:14 Report Abuse
Bhaskaran இப்போ சிவகுமார் ஒரு ஹிந்து விரோதி
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in