Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? - உதிரிப்பூக்கள்

22 மே, 2020 - 08:57 IST
எழுத்தின் அளவு:
Marakka-Mudiyuma---Uthiri-pookkal

படம்: உதிரிப்பூக்கள்
வெளியான ஆண்டு: 1979
நடிகர்கள்: விஜயன், சரத்பாபு, அஷ்வினி
இயக்கம்: மகேந்திரன்
தயாரிப்பு: டிம்பிள் கிரியேஷன்ஸ்

இந்த உலகத்திற்கு, 'இது தான் எங்கள் சினிமா' என, ஒரு படத்தை, தமிழகம் காட்ட வேண்டிய நிலை வந்தால், அதற்கு தகுதியான ஒரே படம், உதிரிப்பூக்கள்! புதுமைப்பித்தன் எழுதிய, 'சிற்றன்னை' என்ற சிறுகதையை மையமாக வைத்து, இந்தத் திரைப்படத்தை உருவாக்கியிருப்பார், மகேந்திரன்.

தன்னை விட, பெரிய ஆள் யாரும் இருக்கக் கூடாது என்ற எண்ணம், ஊரில் பள்ளிக்கூடம் நடத்தும், விஜயனுக்கு உண்டு. தன் மனைவி அஸ்வினி மற்றும் இரு குழந்தைகளோடு வசித்து வருகிறார். அஸ்வினியின் தங்கை மதுமாலினிக்கும், ஆசிரியர் சுந்தருக்கும் திருமண ஏற்பாடு நடக்கும். அப்போது விஜயனால், மதுமாலினி மானபங்கப்படுத்தப்படுவார். இதனால் வெகுண்டு எழும் கிராம மக்கள், விஜயனுக்கு கொடுக்கும் தண்டனையே, படத்தின் கதை.வில்லன் கதாபாத்திரத்தை, அற்புதமாக செய்திருப்பார், விஜயன். அவர் தான், இப்படத்தின் நாயகன்.

சுகாதார அதிகாரியாக வரும் சரத்பாபுவிடம், அத்தனை நேர்த்தி காணப்படும். சின்ன கிராமம், ஆறு என, சின்ன வட்டத்திற்குள், ஒளிப்பதிவில் வித்தை காட்டிய, அசோக்குமாரும்; இசையின் வழியே உணர்வுகளை வழிந்தோட செய்த இளையராஜாவும், இப்படத்தின் துாண்கள்.

'இத்தனை நாளும், நான் கெட்டவனா இருந்தேன். நீங்க நல்லவங்களா இருந்தீங்க. ஆனா இப்போ, உங்களையும், என்னை மாதிரி ஆக்கிட்டேன். நான் பண்ணதிலேயே, பெரிய தப்பு இது தான்' போன்ற வசனங்கள், படத்தின் தரத்தை மேலும் உயர்த்தின.

'அழகிய பெண்ணே, உறவுகள் நீயே...' போன்ற காலத்தால் அழியாக பாடல்கள், இப்படத்திற்காக உருவாகின.படம் பார்த்த பின், சுமக்க முடியாத பாரத்தை, நம் மனது சுமக்கும். உலகத்தரமான உதிரிப்பூக்கள்!

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? -  ஆறிலிருந்து அறுபது வரைமறக்க முடியுமா? - ஆறிலிருந்து அறுபது ... மறக்க முடியுமா? -  நினைத்தாலே இனிக்கும் மறக்க முடியுமா? - நினைத்தாலே ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in