Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? - ஆறிலிருந்து அறுபது வரை

22 மே, 2020 - 08:40 IST
எழுத்தின் அளவு:
Marakka-Mudiyuma-:-Aarilirunthu-Arubathu-Varai

படம்: ஆறிலிருந்து அறுபது வரை
வெளியான ஆண்டு: 1979
நடிகர்கள்: ரஜினி, படாபட் ஜெயலட்சுமி, சோ ராமசாமி, சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன்
இயக்கம்: எஸ்.பி.முத்துராமன்
தயாரிப்பு: பி.ஏ.ஆர்ட்., புரொடக்ஷன்ஸ்

ரஜினி, 'மாஸ் ஹீரோ'வாக ஜொலித்தாலும், சிறந்த நடிகராக, மக்கள் மனதில் இடம்பெற்ற படங்களில், ஆறிலிருந்து அறுபது வரை படத்திற்கு முக்கிய இடம் உண்டு.கதை, வசனம், பாடல்கள் எழுதி, படத்தை தயாரித்திருந்தார், பஞ்சு அருணாசலம். ரஜினிக்கு பிடித்தமான, எஸ்.பி.முத்துராமன் இயக்கியிருந்தார். வில்லனாக, வில்லத்தனம் உடைய கதாநாயகனாக நடித்து, வளர்ந்து வந்த ரஜினி, கதை நாயகனாக பரிணமித்த படம், இது.

சந்தானம் என்பவரின் வாழ்க்கை வரலாறு இப்படம் எனக் கூறலாம். 6 வயதில், குடும்ப பாரத்தை சுமக்கத் துவங்கி. 60 வயதில் மரணத்தை சந்திக்கும் நபரின் வாழ்வில் நிகழும் சம்பவங்கள், இப்படத்தில் முத்து மணிகள் போல கோர்க்கப்பட்டு இருக்கும். இளம்வயதில் தந்தையை இழந்து, தங்கை, தம்பிகளை வளர்க்க வேண்டிய கட்டாயம், சந்தானத்திற்கு உருவாகும். தன் உழைப்பால், அவர்களை நல்ல நிலைக்கு உயர்த்துவார். ஆனால், இவர் உதாசீனப்படுத்தப்படுவார். மனைவி, பிள்ளையுடன், சந்தானம் வறுமையில் வாடுவார். மனைவியை தீ விபத்தில் பறிகொடுத்து, எதிர்காலத்தை நினைத்து வேதனைப்படும் நிலையில், சந்தானம் எழுத்தாளராக பரிணாமம் எடுப்பார். பணம், புகழ் சேரும்; விலகிய உறவுகள் ஒன்றிணையும். தன் மனைவியின் நினைவிலேயே, உயிர் துறப்பார், சந்தானம்.

துயரத்தை தாங்கி நிற்கும் கதாபாத்திரத்தை, ரஜினி, தன் தோளில் தாங்கியிருப்பார். நண்பராக, சோவும்; மனைவியாக படாபட் ஜெயலட்சுமியும், தங்கள் கதாபாத்திரத்தை அழகாக செய்திருப்பர். 'கண்மணியே காதல் என்பது கற்பனையோ...' உள்ளிட்ட அற்புதமான பாடல்களை தந்திருந்தார், இளையராஜா. தமிழ் சினிமாவில் வரலாற்றில், ஆறிலிருந்து அறுபது வரை படத்திற்கு முக்கிய இடம் உண்டு.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - முள்ளும் மலரும்மறக்க முடியுமா? - முள்ளும் மலரும் மறக்க முடியுமா? - உதிரிப்பூக்கள் மறக்க முடியுமா? - உதிரிப்பூக்கள்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in