Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? - முள்ளும் மலரும்

19 மே, 2020 - 19:01 IST
எழுத்தின் அளவு:
Marakka-Mudiyuma-:-Mullum-Malarum

படம்: முள்ளும் மலரும்
வெளியான ஆண்டு: 1978
நடிகர்கள்: ரஜினி, ஷோபா, சரத்பாபு, படாபட் ஜெயலட்சுமி
இயக்கம்: மகேந்திரன்
தயாரிப்பு: வேணு செட்டியார்

தமிழ் சினிமாவின் குறிஞ்சி பூ, முள்ளும் மலரும்! உமாசந்திரன் எழுதிய நாவலை, மகேந்திரன் திரைப்படமாக மாற்றினார். திரையுலகில் நீண்ட காலம் இருந்தாலும், அவர் இயக்கிய முதல் படம், இது. அதிக பாடல்களும், பக்கம் பக்கமாக வசனங்களும் ஆக்கிரமித்திருந்த தமிழ் சினிமாவில், காட்சி வழியே படம் காண்பித்து, புதிய புரட்சியை ஏற்படுத்தினார் மகேந்திரன்.

மாபெரும் வெற்றி பெற்ற இப்படம், திரையுலகை ஆரோக்கியமான பாதைக்கு திசை திருப்பியது. ஆனால், பிற இயக்குனர்களின் படங்கள், சினிமாவை, மசாலா பக்கம் திருப்பினர். முள்ளும் மலரும் படத்தின் வழியாக, ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திரா, நமக்கு கிடைத்தார். ரசிகர்களை, கதைக்களத்திற்குள் நிற்பதுபோன்ற பிரமையை, அவரின் ஒளிப்பதிவு உருவாக்கி இருக்கும்.

அண்ணன் - தங்கை பாசம் தான் கதைக்களம். ரஜினி, சாதாரண நடிகர் அல்ல என்பதை, இந்த படம் தான் வெளிச்சமிட்டு காட்டியது. சுயகவுரவம், பாசம், கிண்டல், கோபம், இயலாமை என, அனைத்தையும் பிரதிபலிக்கும், 'காளி' கதாபாத்திரத்தில், அட்டகாசமாக நடித்திருப்பார், ரஜினி. 'இரண்டு கையும், இரண்டு காலும் போனாக் கூட, காளிங்கறவன் பொழைச்சுக்குவான் சார்... கெட்ட பய சார் அவன்' இந்த, டயலாக் வெகு பிரபலம். படத்தில் இது, பஞ்ச் டயலாக் அல்ல. வேலை பறிபோன விரக்தியில் உதிர்க்கும் தன்னம்பிக்கை வரிகள்!

ரஜினி, சரத்பாபு, ஷோபா உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களும், தனித்து தெரியாமல், கதையோட்டத்தில் இடம்பெற்றிருந்தது, திரைக்கதையின் வெற்றி. இளையராஜாவின் இசையில், 'அடிப்பெண்ணே, ராமன் ஆண்டாலும், செந்தாழம்பூவில், நித்தம் நித்தம் நெல்லுச்சோறு...' உள்ளிட்ட, தேனமுது பாடல்கள், இன்றும் காற்றில் தவழ்ந்து கொண்டே இருக்கிறது.

முள்ளும் மலரும் குறையில்லாத படம்; வேண்டுமானால், திருஷ்டி பொட்டு வைக்கலாம்!

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா?  - மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்மறக்க முடியுமா? - மதுரையை மீட்ட ... மறக்க முடியுமா? -  ஆறிலிருந்து அறுபது வரை மறக்க முடியுமா? - ஆறிலிருந்து அறுபது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

raji - CHENNAI,இந்தியா
20 மே, 2020 - 05:38 Report Abuse
raji happy
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in