Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? - மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்

18 மே, 2020 - 19:55 IST
எழுத்தின் அளவு:
Marakka-Mudiyuma-:-Madurai-Meeta-Sundarapandian

படம்: மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
வெளியான ஆண்டு: 1978
நடிகர்கள்: எம்.ஜி.ஆர்., லதா, நம்பியார்
இயக்கம்: எம்.ஜி.ஆர்.,
தயாரிப்பு: சொலீஸ்வர் கம்பைன்ஸ்

தமிழ் சினிமாவில், கமல், ரஜினி, சிவக்குமார் என, இளம் குதிரைகள் பாய்ந்தோடிய காலத்தில், தமிழக அரசியலில், அ.தி.மு.க., புயல் மையம் கொண்டிருந்த சூழலில், எம்.ஜி.ஆர்., மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தை உருவாக்கினார்.

மூன்றாம் ராஜராஜசோழனிடம் இருந்து, மதுரையை, முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் மீட்ட வரலாற்றை மையப்படுத்தி, எழுத்தாளர் அகிலன் எழுதிய, 'கயல்விழி' என்ற புதினத்தின் அடிப்படையில் உருவானது, மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன். இப்படத்தை, பி.ஆர்.பந்துலு இயக்கி முடிப்பதற்கு முன், மரணமடைந்தார். அதனால், இயக்குனர் பணியையும், எம்.ஜி.ஆர்., ஏற்றார். படத்தில் இடம்பெற்ற பிரமாண்டமான போர்க் காட்சி, ஜெய்ப்பூரில் படமாக்கப்பட்டது. அதற்காக, ஒரே நேரத்தில், வெவ்வேறு கோணங்களில், ஒன்பது கேமாராக்கள் பயன்படுத்தப்பட்டன.

எம்.ஜி.ஆர்., தொழில்நுட்பத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தார் என்பது, இந்த படப்பிடிப்பும் ஒரு சான்று. படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருக்கும்போதே, அப்போது நடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., பெரும்பான்மை பெற்றது. முதல்வராக, எம்.ஜி.ஆர்., பதவியேற்க வேண்டிய நிலை. இக்கட்டான சூழ்நிலையில், முதல்வர் பதவியேற்பு விழாவை, 10 நாட்கள் தள்ளி வைத்து, இரவு - பகலாக நடித்து, படத்தை முடித்தார்.

எம்.ஜி.ஆர்., முதல்வராகி, ஆறு மாதங்களுக்கு பின், இப்படம் வெளியானது. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்தார்.'ஆஹா... ஓஹோ' என, பாராட்டத்தக்க படம் அல்ல. எம்.ஜி.ஆர்., ரசிகர்கள் பார்க்கலாம்; அவ்வளவே!எம்.ஜி.ஆர்., முதல்வரான பின், வெளியான படம் என்பதோடு, அவர் கடைசியாக நடித்த படம் என்பதாலும், மறக்க முடியாத படமாகிறது, மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - சிகப்பு ரோஜாக்கள்மறக்க முடியுமா? - சிகப்பு ரோஜாக்கள் மறக்க முடியுமா? - முள்ளும் மலரும் மறக்க முடியுமா? - முள்ளும் மலரும்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

19 மே, 2020 - 11:57 Report Abuse
பந்துலு வரலாற்றை தப்பு தப்பாய் சொல்லும் படம் ....
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
18 மே, 2020 - 20:56 Report Abuse
Bhaskaran பந்துலு இறந்தபின் கடன்காரர்கள் அவரது குடும்பத்திற்கு கடும் நெருக்கடி கொடுத்தனர் .செய்தி கேள்விப்பட்ட எம்ஜியார் .கடனுக்கு பொறுப்பு ஏற்றுக்கொண்டு நடிக்க பணம் வாங்காமல் பாதியில்நின்றிருந்த அந்த திரைப்படத்தை இயக்கி கொடுத்தது வரலாறு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in