Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? இளமை ஊஞ்சலாடுகிறது

16 மே, 2020 - 10:19 IST
எழுத்தின் அளவு:
Marakka-Mudiyuma-:-ilamai-oonjal-aadukirathu

படம்: இளமை ஊஞ்சலாடுகிறது
வெளியான ஆண்டு: 1978
நடிகர்கள்: கமல், ரஜினி, ஸ்ரீபிரியா, ஜெயசித்ரா
இயக்கம்: ஸ்ரீதர்
தயாரிப்பு: ஸ்ரீ சித்ரா மஹால்

கடந்த, 1960களில், தமிழ் சினிமாவில் இளமை புகுத்திய, இயக்குனர், ஸ்ரீதர், 1970களில் தடுமாற துவங்கினார்.அடுத்தடுத்த படங்கள் தோல்வியை தழுவியதால், சில மாற்றங்களுக்கு தன்னை தயார்படுத்திக்கொண்டு, இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் களமிறங்கினார்.அப்போது, இரட்டை குதிரைகளாய், வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருந்த, கமல் - ரஜினி இருவரையும், படத்தில் நடிக்க, ஒப்பந்தம் செய்தார்.

ஸ்ரீதர் - எம்.எஸ்.விஸ்வநான் கூட்டணி, 58 படங்களில் இணைந்திருந்தது. அதில், பெரும்பாலான பாடல்கள் வெற்றி பெற்றன. இருப்பினும், அப்போது முன்னணி இசையமைப்பாளராக இருந்த, இளையராஜாவுடன் கூட்டணி வைத்தார்.படத்தின் முக்கிய கருவே, நட்பும், தியாகமும் தான்.

ரஜினி - கமல் இருவருக்கும் சமமான கதாபாத்திரங்கள்.பணக்காரர் ரஜினியின் நிறுவனத்தில் பணிபுரிபவர், கமல். ஆனாலும், இருவரும் நண்பர்கள். அதே போன்றே, கல்லுாரி மாணவியான, ஸ்ரீப்ரியாவும், இளம் விதவையான, ஜெயசித்ராவும் தோழியர். இந்த நான்கு பேருக்குள் நடக்கும் நிகழ்வுகள் தான்,திரைக்கதை.

இப்படம், 175 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது. சிறந்த திரைப்படத்திற்கான, தமிழக அரசின் விருது வென்றது. தெலுங்கில், வயசு பிலிசின்டி என்றும், ஹிந்தியில், தில் இ நடான் என்ற பெயரிலும், ரீமேக் செய்யப்பட்டது.

கிண்ணத்தில் தேன் வடித்து, என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சி, ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது, தண்ணி கருத்திருக்கு... போன்ற பாடல்களும், பட்டி தொட்டியெங்கும் கலக்கின.வெற்றி எனும் பட்டாம்பூச்சியை, ஸ்ரீதர் இப்படத்தில் பிடித்துவிட்டார். தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் என்றும், இளமைஊஞ்சலாடுகிறது!

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - அவள் அப்படித்தான்மறக்க முடியுமா? - அவள் அப்படித்தான் மறக்க முடியுமா? - சிகப்பு ரோஜாக்கள் மறக்க முடியுமா? - சிகப்பு ரோஜாக்கள்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in