Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? - அவள் அப்படித்தான்

15 மே, 2020 - 11:17 IST
எழுத்தின் அளவு:
Marakka-Mudiyuma-:-Aval-Appadithaan

படம்: அவள் அப்படித்தான்
வெளியான ஆண்டு: 1978
நடிகர்கள்: கமல், ரஜினி, ஸ்ரீபிரியா, சிவச்சந்திரன்
இயக்கம்: சி.ருத்ரய்யா
தயாரிப்பு: ராகமஞ்சரி

'தமிழில், இப்படியான படம் வந்தது, ஆச்சரியம்' என, பிரபல இயக்குனர், மிருணாள் சென் பாராட்டியிருந்தார். பாரதிராஜா, 'எந்த மாதிரியான வேட்கையுடன், நான் சினிமாவுக்கு வந்தேனோ, அதைத் திரும்பிப் பார்க்க வைத்தது, இப்படம்' என்றார். கமல், 'தமிழ் சினிமாவின் அடித்தளத்தையே உலுக்கிய, அந்த படத்திற்காக, இந்த உலகம், இயக்குனர் ருத்ரைய்யாவை என்றும் நினைவுகூரும்' என்றார்.

ஆம்... தமிழ் சினிமாவிற்கு, புத்துயிர் பாய்ச்ச வந்த படம், அவள் அப்படித்தான். ஆனால், மசாலா படங்களில் ஊறிப்போன தமிழ் ரசிகர்கள், அன்று, அப்படத்தை புறக்கணித்தது, வரலாற்று பிழை. இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றிருந்தால், தமிழ் சினிமாவின் போக்கு திசைமாறியிருக்கும்.

தமிழில், கடைசியாக வெளியான, கறுப்பு - வெள்ளைப் படங்களில், இது ஒன்றாகும். கே.ராஜேஷ்வர், வண்ணநிலவன் ஆகியோருடன் இணைந்து, திரைக்கதையை எழுதியிருந்தார், இயக்குனர் ருத்ரய்யா. படத்தின் கதையைப் பற்றி, கூற விரும்பவில்லை. இப்போதாவது பாருங்கள்... இந்த தரமான படத்தை, நாம் ஏன் கொண்டாடாமல், புழுதியில் வீசினோம் என்ற கேள்வி,உங்களுக்குள் எழும்.

தமிழக அரசின் சார்பில், சிறந்த திரைப்படத்திற்கான இரண்டாம் பரிசு பெற்றது. ஒளிப்பதிவு திரைப்படக் கல்லூரியில் படித்த, நல்லுசாமி மற்றும் ஞானராஜசேகரன் ஆகியோர், யாரிடமும் பணி புரியாமல், நேரடியாக இப்படத்தில் களமிறங்கினர்; சிறந்த ஒளிப்பதிவாளர் விருது பெற்றனர். சிறந்த நடிகைக்கான சிறப்பு பரிசு, ஸ்ரீபிரியாவிற்கு கிடைத்தது.

வணிக ரீதியாக தோல்வி அடைந்தாலும், விமர்சகர்களிடம் பெரும் பாராட்டு பெற்ற படம், அவள் அப்படித்தான். இளையராஜா இசையில், 'உறவுகள் தொடர்கதை...' உள்ளிட்ட பாடல்கள், இன்றும் நம் செவியோரங்களில் ரீங்காரமிடுகின்றன.அவள் அப்படித்தான் படம், சந்தையில் விற்பனை ஆகாமல் போன, நல்லதொரு வீணை!

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? சில நேரங்களில் சில மனிதர்கள்மறக்க முடியுமா? சில நேரங்களில் சில ... மறக்க முடியுமா? இளமை ஊஞ்சலாடுகிறது மறக்க முடியுமா? இளமை ஊஞ்சலாடுகிறது

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Vaduvooraan - Chennai ,இந்தியா
16 மே, 2020 - 12:09 Report Abuse
Vaduvooraan நூற்றுக்கு நூறு உண்மை காமிராவுக்கு பின்னால் நிற்கும் கமல் ஆடியன்ஸை பார்த்து, "உங்களைத்தான்...இந்த பக்கம் பாருங்க திஸ் ஐஸ் நாட் எ கம்ப்ளீட் பிக்ச்சர், ஒன்லி எ ரஷ் பிரிண்ட் " என்று பல முறை எதிரொலிக்கும் ஆடியோ மிக்ஸிங் சகிதம் தொடங்குவதில் இருந்து கடைசியில் ஸ்ரீபிரியாவை கடற்கரை சாலையில் டாக்ஸியில் இருந்து இறக்கிவிட்டுவிட்டு மற்றவர் கிளம்ப, தனியே நிற்கும் அவர் மீது "மீண்டும் ஒரு முறை மஞ்சு இறந்து போனாள்..அவள் பிறப்பாள்..இறப்பாள்..மீண்டும் பிறப்பாள்..அவள் அப்படித்தான்" என்ற வரிகள் கமலின் குரல் சகிதம் scroll செய்து முடிக்கும் வரை ஒரு இனந்தெரியாத சங்கடம் வயிற்றை பிசையும் தமிழ் சினிமாவின் மைல் கல் கமல் ரஜினி ஸ்ரீப்ரியா மூவருக்குமே பெருமை சேர்க்க க்கூடிய படம் நாலு பைட் ரெண்டு குத்து சாங் தாலி சென்டிமென்டு என்பதிலிருந்து விடுபட நினைக்காத தமிழர்களுக்கு செரிமானம் ஆகவில்லை...வசனங்களில் பச்சை மிளகாய் காரம். ரஜினிக்கேற்ற பாத்திரம்..அதன் பிறகு அப்படி ஒரு கேரக்டர் செய்ததாக நினைவில்லை
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in