Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? சில நேரங்களில் சில மனிதர்கள்

14 மே, 2020 - 11:57 IST
எழுத்தின் அளவு:
marakka-mudiyuma

வெளியான ஆண்டு: 1977

நடிகர்கள்: லட்சுமி, ஸ்ரீகாந்த், சுந்தராபாய், நாகேஷ்


இயக்கம்: ஏ.பீம் சிங்


தயாரிப்பு: ஏ.பி.எஸ்.புரொடக் ஷன்ஸ்


ஜெயகாந்தன் எழுதிய, அக்கினிப்பிரவேசம் சிறுகதை, தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, கங்கா எங்கே போகிறாள்? என்ற நாவலை எழுதினார். இதற்கு, சாகித்ய அகாடமி பரிசு கிடைத்தது.இது தான், ஏ.பீம் சிங் இயக்கத்தில், சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படமானது. நல்ல கதைக்கு எதுக்கு அலங்காரம் என்பதால், கறுப்பு - வெள்ளையில், இப்படம் வெளியானது.யாரோ ஒருவனால் பலாத்காரம் செய்யப்படும் கங்கா, குடும்பத்தால் நிராகரிக்கப்படுகிறாள். வாழ்க்கையோடு போராடி, படித்து, நல்ல வேலைக்கு செல்கிறார். பல ஆண்டுகள் கழித்து, தன்னை பலாத்காரம் செய்த பிரபுவை சந்தித்திக்கிறாள்... அவர்களுக்கு இடையே நிகழும் மன போராட்டம் தான், கதைக்களம்.கங்காவாக, லட்சுமி; பிரபுவாக, ஸ்ரீகாந்த். இருவரும், தங்கள் நடிப்பின் உச்சத்தை, இப்படத்தில் காட்டியிருப்பர். லட்சுமிக்கு, சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. ஸ்ரீகாந்த் எனும் சிறந்த நடிகனை, தமிழ் சினிமா சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதை, இப்படத்தின் மூலம், ரசிகர்கள் உணர்வர்.


எம்.எஸ்.விஸ்வநாதன் இசை. இரண்டே பாடல்கள் தான். பிண்ணனி இசை, நம்மை படத்தோடு பயணிக்க வைக்கும்.இத்திரைப்படம், தெலுங்கில், கொன்னி சமயலுலோ கொம்தரு மனுஷுலு என்ற பெயரில் வெளியானது.நாவல்களை திரைப்படமாக்குவது என்பது, கத்தி மேல் நடப்பதற்கு சமம். அதில், ஏ.பீம் சிங் வெற்றி பெற்றார்.சில நேரங்களில் சில மனிதர்கள் படம் முடிந்து, திரையரங்கில் இருந்து வெளியேறிய ரசிகர்களிடம் நிறைந்திருந்த அமைதி, அவர்களின் மனதுக்குள் நடத்திய போராட்டத்தை உணர்த்தியது. இப்படம் பாருங்கள், நீங்களும் அதை அனுபவிப்பீர்கள்!


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - ஆட்டுக்கார அலமேலுமறக்க முடியுமா? - ஆட்டுக்கார அலமேலு மறக்க முடியுமா? - அவள் அப்படித்தான் மறக்க முடியுமா? - அவள் அப்படித்தான்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Vaduvooraan - Chennai ,இந்தியா
24 மே, 2020 - 12:05 Report Abuse
Vaduvooraan அக்கினி பிரவேசம் விகடனில் சிறுகதையாக வெளிவந்து பாராட்டுப்பெற்றது. அதன் விரிவாக்கம் தொடர் கதையாக தினமணிகதிரில் காலங்கள் மாறும் என்ற பெயரில் தொடங்கி பிறகு பாதியில் ஜெயகாந்தனால் சில நேரங்களில் சில மனிதர்கள் என்று பெயர் மாற்றப்பட்டு வெளியாகை பரபரப்பை ஏற்படுத்தியது. திரைப்படமும் நீண்ட நாட்களுக்கு பின்னர் பீம் சிங்கிற்கு நல்ல பெயரை தேடித்தந்தது. இதற்கு பிறகு பல ஆண்டுகளுக்கு பின்னர் கங்கை எங்கே போகிறாள் என்ற பெயரில் சிலநேரங்களில் சிலமனிதர்களின் தொடர்ச்சி வெளிவந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் அதே நடிகர்கள் தொழில்நுட்ப குழுவிடன் வெளியாகி பாராட்டு பெற்றது. அறிவு சார்ந்த டைனிங் டேபிள் உரையாடல்கள் தமிழ் ரசிகர்களுக்கு செரிமானம் ஆகாது போனதில் படம் சரியாக ஓடவில்லை. மீண்டும் ஜெயகாந்தனின் கருணையினால் அல்ல "கருணை உள்ளம்' என்ற பெயரில் படமாக்கப்பட்டு காணாமல் போனது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in