Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? - ஆட்டுக்கார அலமேலு

13 மே, 2020 - 08:22 IST
எழுத்தின் அளவு:
Marakka-Mudiyuma-:-Aattukara-Alamelu

படம்: ஆட்டுக்கார அலமேலு
வெளியான ஆண்டு: 1977
இயக்கம்: ஆர்.தியாகராஜன்
நடிகர்கள்: சிவகுமார், ஸ்ரீபிரியா
தயாரிப்பு: தண்டாயுதபாணி பிலிம்ஸ்

கடந்த, 1977ல், எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், ரஜினி, கமல் படங்கள் ஏராளமாக வந்தாலும், வசூலை வாரி குவித்தது என்னவோ, ஒரு ஆடு தான்! பிரபல தயாரிப்பாளர், எம்.எம்.ஏ.சின்னப்ப தேவர் எடுத்த சில படங்கள் தோல்வியைத் தழுவ, ஆடு ஒன்றை பிரதான கதாபாத்திரமாக்கி, ஆட்டுக்கார அலமேலு கதை உருவாக்கினார். இயற்பெயர், அலமேலு என்பதாலேயே, சிறு வேடங்களில் நடித்து வந்த, ஸ்ரீபிரியா இதில் கதாநாயகியாக ஒப்பந்தமானார்.

சின்னப்ப தேவரின் மருமகன், தியாகராஜன் தான், படத்தின் இயக்குனர். ராமு என்ற ஆட்டை வளர்க்கும் ஸ்ரீபிரியாவிற்கு, ஊர் செல்வந்தன் ஜெய்கணேசால் தொல்லை ஏற்படுகிறது. காதலன் சிவகுமாரும், ஆடும் சேர்ந்து, ஸ்ரீபிரியாவை காப்பாற்றுகின்றனர். இது தான் கதை...

'இதெல்லாம் ஒரு கதையா?' என, நினைக்கிறீர்களா... ஆனால், இப்படம் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. ஆடு, நாயைத் துரத்துகிறது... 'ஆபத்து' என்ற காகிதத்தைக் கவ்வியபடியே, போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்கிறது... 'டேப்ரிகார்டரில்' பாடல் கேட்கிறது... என, ஆடு வரும்போதெல்லாம், தமிழர்கள் கைத்தட்டினர்.

ஆட்டுக்கார அலமேலு படம், தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து, ஹிந்தி மற்றும் தெலுங்கில், 'ரீமேக்' செய்யப்பட்டது. சங்கர் - கணேஷ் இசையில், 'பருத்தி எடுக்கையிலே...' போன்ற பாடல்கள், பெரும் வரவேற்பை பெற்றன. ஆட்டுக்கார அலமேலு படத்தில் நடித்த ஆட்டை, தமிழகம் எங்கும் அழைத்து சென்று, ரசிகர்களை, 'குஷி'ப்படுத்தினர். சினிமாவில் நடித்தால், ஆட்டை பார்க்கக் கூட, மக்கள் மந்தையாக செல்வர் என்பது, அன்றிலிருந்து, இன்று வரை தொடர்கிறது என்பது தான் வேதனை.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - 16 வயதினிலேமறக்க முடியுமா? - 16 வயதினிலே மறக்க முடியுமா? சில நேரங்களில் சில மனிதர்கள் மறக்க முடியுமா? சில நேரங்களில் சில ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

14 மே, 2020 - 09:53 Report Abuse
ஸாயிப்ரியா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி stunt ஐ மனதில் நிறுத்தி கைதட்டலை அதிகம் பெற்றது ஆடு தானே. ரசிகர்கள் பாரபட்சம் பார்க்க மாட்டார்கள். என்ன ஒண்ணு ஆடு ஆட்டோகிராப் போடாது.
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
13 மே, 2020 - 12:02 Report Abuse
Bhaskaran படம் படு குப்பை தற்கால ஹிந்து விரோதி பழனிசாமி சிவகுமார் இந்த படத்தில் இருக்கிறார். அதீத ஒப்பனையுடன் கமல் கட்சி கொள்கைப்பரப்பு செயலாளர் ஸ்ரீப்ரியாவும் நடித்து ஜனங்களை முட்டாளாக்கி காசை வாரிக்குவித்தபடம் .வாரம் தவறினாலும் தொலைக்காட்சிகள் இப்போதும் ஒளிபரப்புகின்றனர்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in