Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா...? - சினிமாப் பைத்தியம்

07 மே, 2020 - 12:37 IST
எழுத்தின் அளவு:
Marakka-Mudiyuma-:-Cinema-Paithiyam

படம்: சினிமாப் பைத்தியம்
வெளியான ஆண்டு: 1975
நடிகர்கள்: ஜெய்சங்கர், கமல், ஜெயசித்ரா
இயக்கம்: முக்தா சீனிவாசன்
தயாரிப்பு: ஏ.எல்.எஸ்., புரொடக்ஷன்

முன்னாள் முதல்வர், காமராஜர் பார்த்த கடைசிப்படம், சினிமாப் பைத்தியம். சிவாஜி கணேசன், ஜெயலலிதா, கே.பாலாஜி, மனோரமா, இயக்குனர்கள் ஏ.பீம்சிங், பி.மாதவன் ஆகியோர், இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் இடம்பெற்றனர்.கடந்த, 1971ல் வெளியான, குட்டி என்ற படத்தின், தமிழ், 'ரீமேக்' இது. பொழுதுபோக்கு ஊடகமான, சினிமா மீது அதீத மோகத்தோடு இருக்காதீர்கள் என, 1975ல் வெளியான படம். ஆனால், இன்று வரை, பலருக்கு பைத்தியம் தெளியவில்லை.

இப்படத்தில் ஜெயசித்ரா, சினிமா நடிகர் ஜெய்சங்கரின் தீவிர ரசிகையாக இருப்பார். 'ஜெய்சங்கரைத் தான், திருமணம் செய்துக்கொள்வேன்' என, பிடிவாதம் பிடிப்பார். சவுகார் ஜானகி, வி.கே.ராமசாமி, ஜெய்சங்கர், கமல் ஆகியோர் இணைந்து, 'சினிமா என்றால் என்ன?' என்பதை, ஜெயசித்ராவிற்கு புரியவைப்பதே, இப்படத்தில் திரைக்கதை.

இப்படத்தில், வாஞ்சிநாதனாக, சிவாஜிகணேசனும்; ராணி மங்கம்மாவாக, ஜெயலலிதாவும் நடிக்கும் காட்சிகள் இடம் பெறும். ஏ.சகுந்தலா, டான்ஸ் ஆடுவார். ஜெய்சங்கரின் உதவியாளராக வரும் சோவும், தன் பங்கை நிறைவாக செய்திருப்பார். சங்கர் - கணேஷ் இசை, பரவாயில்லை எனும் ரகம். பாடல்கள் பிரபலமடைந்திருந்தால், படம் பெரிய அளவில் பேசப்பட்டிருக்கும்.

நல்லக் கருத்துக்களை மக்களிடம் சொல்ல, சினிமாவை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை, இப்படம் முன் நிருத்துகிறது. ஆனால், 45 ஆண்டுகளாகியும், தமிழ் சினிமாக்காரர்களுக்கு அது புரியவில்லை! நாடக பாணியும், மசாலா படங்களும் இடம்பெற்ற, 1970களில், இப்படியோரு படமா என, விமர்சகர்கள் ஆச்சரியத்துடன் பேசிக்கொள்ளும் படம், சினிமாப் பைத்தியம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா...? -  அபூர்வ ராகங்கள்மறக்க முடியுமா...? - அபூர்வ ராகங்கள் மறக்க முடியுமா? - நவராத்திரி மறக்க முடியுமா? - நவராத்திரி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in