வாழை படத்தை எதிர்பார்க்கும் திவ்யா துரைசாமி | 'லியோ' வெளியீட்டிற்குப் பிறகு 'விஜய் 68' பூஜை புகைப்படங்கள் | சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம் | ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங் | ‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை | விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம் | ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு | ரஜினி படத்தில் இணைந்தார் துஷாரா விஜயன் | அக்டோபர் 6ல் வெளியாகும் அயலான் பட டீசர் | ஓடிடியில் வெளியானாலும் 50 நாட்களைக் கடந்தும் ஓடும் 'ஜெயிலர்' |
படம்: நான் அவனில்லை
வெளியான ஆண்டு: 1974
நடிகர்கள்: ஜெமினி கணேசன், லட்சுமி, கமல்ஹாசன், ஜெயசுதா
இயக்கம்: கே.பாலசந்தர்
தயாரிப்பு: ஸ்ரீ நாராயணி பிலிம்ஸ்
நடிகர் ஜெமினி கணேசன் தயாரித்த ஒரே படம், நான் அவனில்லை. காதல் மன்னனான ஜெமினி கணேசனுக்கு, இதில், பல பெண்களை காதலித்து ஏமாற்றும் கதாபாத்திரம். மனுஷன், பின்னி பெடலெடுத்திருப்பார்! கல்யாண மோசடிப் பேர்வழியான, மாதவ் காஜி என்பவனது, குற்ற சரித்திரத்தை மையப்படுத்தி, 1962ல், 'டூ மீ நவ்ஹெக்' என்ற, மராத்தி மொழி நாடகம் வெளியானது. இந்நாடகத்தைத் தழுவி, நான் அவனில்லை படத்தை, கே.பாலசந்தர் இயக்கியிருப்பார்.
பலவிதப் பெயர்களும், பின்புலங்களும் உடைய, வெவ்வேறு மனிதராக நடித்து, பல பெண்களை திருமணம் செய்து, சொகுசாக வாழும், குற்ற மனிதனின் கதை. பலரை ஏமாற்றும் வில்லன் கதாபாத்திரத்தை, ஜெமினி கணேசன் ஏற்றிருந்தார்; ஒன்பது வேடங்களில், நடித்திருந்தார். மிகவும் நல்லவராக, காதலில் தோல்வியுற்று வருந்தும் நாயகனாக நடித்து வந்த ஜெமினி கணேசனுக்கு, இந்த படம், வித்தியாசமான பிம்பத்தைக் கொடுத்தது. இந்தப் படத்திற்காக, அவர், 'பிலிம்பேர்' விருது பெற்றார்.
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், கண்ணதாசன் வரிகளில், 'ராதா காதல் வராதா...' போன்ற பாடல்கள், படத்திற்கு பலம் சேர்த்தன. கடந்த, 2007ல், இப்படம், 'ரீமேக்' செய்யப்பட்டு, பெரும் வெற்றி பெற்றது. இப்படத்திலும், லட்சுமி நடித்திருந்தார். காதல் வலையில் வீழ்த்தும் மோசடி பேர் வழிகளை பற்றி, பெண்களை எச்சரிக்கும் விதமாக வெளிவந்த, நான் அவனில்லை படம், அப்பவே இப்படி ஒரு கதையா என, நம்மை வாய்பிளக்க வைக்கும்.