50வது படத்தின் படப்பிடிப்பு : அஞ்சலி மகிழ்ச்சி | தரத்திற்காக தள்ளிப் போன 'அயலான்' | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' படப்பிடிப்பு ரத்து : காரணம் என்ன? | 'கமெண்ட்' ஆப் செய்து ஏஆர் ரஹ்மான் டுவீட் | ஹிந்தி நடிகை பரிணீதி சோப்ரா திருமணம் | 'சந்திரமுகி 3' நடந்தால் ரஜினிகாந்த் நடிப்பாரா ? | விக்ரமின் மகாவீர் கர்ணன் விரைவில் துவக்கம் ; இயக்குனர் அறிவிப்பு | உத்தரகண்ட் முதல்வரை சந்தித்த ஆதிபுருஷ் நாயகி ; பின்னணி இதுதான் | தெறி ஹிந்தி ரீமேக்கில் இணைந்த கீர்த்தி சுரேஷ்! | இந்தியாவில் ஹிந்தியில் மட்டும் 500 கோடி கடக்கும் 'ஜவான்' |
வெளியான ஆண்டு: 1973
நடிகர்கள்: சிவாஜிகணேசன், விஜயகுமாரி, முத்துராமன், சிவகுமார், எம்.என்.நம்பியார், ஆர்.எஸ்.மனோகர், டி.ஆர்.மகாலிங்கம்
இயக்கம்: ஏ.பி.நாகராஜன்
தயாரிப்பு: ஆனந்த் மூவீஸ்
தஞ்சை பெரியக்கோவிலை போன்றே, அதைக் கட்டிய மாமன்னர் ராஜ ராஜ சோழன் வரலாறும், பிரமாண்டமானது. அவரின் வரலாற்றை, திரைப்படமாக்கும் முயற்சியில், 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் முயன்றும், பல்வேறு காரணங்களால், அது நிறைவேறவில்லை.
கடந்த, 1973ல், ராஜ ராஜ சோழன் வரலாற்றை திரைப்படமாக தயாரிக்க, ஜி.உமாபதி முன்வந்தார். தமிழில் உருவான, முதல் சினிமாஸ்கோப் படமாக, ராஜராஜ சோழன் உருவானது. வரலாற்று கதாநாயகர்களின் வேடங்களில் தொடர்ந்து நடித்து வந்த சிவாஜி கணேசன், இப்படத்தில் ராஜ ராஜ சோழன் ஆனார். எழுத்தாளர் அரு.ராமநாதன் எழுதிய நாடகத்தை, டி.கே.எஸ்., சகோதரர்கள், தமிழகம் எங்கும் சிறப்பாக அரங்கேற்றினர். இந்நாடகத்தை, படமாக்க உரிமை பெறப்பட்டது.
ராஜ ராஜ சோழனின் ஆட்சி முறையையும், தஞ்சை பெரிய கோவில் கட்டியதையும் முன்னிறுத்தி, இப்படத்தின் கதை உருவானது. தஞ்சை பெரியகோவிலை கட்டியது, ராஜ ராஜனின் முக்கிய சாதனை என்பதால், கோவில் கட்டப்படும் காட்சியை பிரமாண்டமாக எடுக்க, உமாபதி விரும்பினார். ஆனால், கோவிலுக்குள் படப்பிடிப்பை நடத்த, மத்திய அரசு அனுமதிக்கவில்லை. இதனால், 'வாசு ஸ்டூடியோ'வில் பிரமாண்டமான, 'செட்' அமைத்து, அக்காட்சியை படமாக்கினர்.
தமிழின் முதல் சினிமாஸ்கோப் படம் என்பதால், ஒளிப்பதிவாளர், டபிள்யூ.ஆர்.சுப்பாராவ், மும்பை சென்று, சிறப்பு கருவிகளை வாங்கி வந்து, பயிற்சி பெற்ற பின், இப்படத்தை படம் பிடித்தார்.படத்திற்கு, குன்னக்குடி வைத்தியநாதன் இசை அமைத்தார். கண்ணதாசன் பாடல்கள் எழுதினார். அவர் எழுதிய, 'மாதென்னை படைத்தான்...' பாடலில், 12 தமிழ் மாதங்களின் பெயர்களும் இடம் பெற்றன.
திரைக்கதை சோடை போனதால், இப்படம், எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. ஆனால், ராஜ ராஜ சோழனின் வரலாறு, திரையில் மீண்டும் கம்பீரமாக வெளிவரும் நாள், வெகு தொலைவில் இல்லை.