Advertisement

சிறப்புச்செய்திகள்

என் மனைவி கர்ப்பமானால் நானே சொல்கிறேன் - ஆர்யா | கேரளாவில் யானையை கொன்றவருக்கு லிங்குசாமி வழங்கிய மானசீக தண்டனை | என்ன அவசரம் ; ரஜிஷாவை எரிச்சலூட்டிய விமான பயணிகள் | தென் ஆப்பிரிக்காவில் சிக்கி 3 மாதங்கள் கழித்து கேரளா திரும்பிய படக்குழு | வைரமுத்துவை வெளியேற்ற வேண்டும் ; சின்மயிக்கு ஆதரவாக சி.எஸ்.அமுதன் குரல் | ரூ.352 கோடி வசூலித்த டாப்ஸி படங்கள் | மும்பை தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் சோனுசூட் | தமிழில் பிசியானார் ஸ்மிருதி வெங்கட் | கொரோனா கால ரிலாக்ஸ்: இசை ஆல்பம் வெளியிடும் கவுதம் மேனன் | 10ந் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்பு: தயாரிப்பாளர் சங்கம் முடிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? அடிமைப் பெண்

28 மார், 2020 - 14:03 IST
எழுத்தின் அளவு:
Flashback-about-Adimaipenn

வெளியான ஆண்டு: 1969
நடிகர்கள்: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, சோ, சந்திரபாபு
இயக்கம்: கே.சங்கர்
தயாரிப்பு: எம்.ஜி.ஆர்., பிக்சர்ஸ்

மன்னரான, தன் தந்தையை கொன்று, கொடூர ஆட்சி நடத்தி வரும் வில்லனை, மகன் பழிவாங்குகிறான். 25 ஆண்டுகளாக அடிமைச் சங்கிலியில் கட்டுண்டு கிடக்கும், தன் தாயை மீட்கிறான்; இது தான், கதை!

இது, பாகுபலி படம் என்கிறீர்களா... அது தான் இல்லை; 1969ல் வெளியான, அடிமைப் பெண் படத்தின் கதை. இதில், நவீன தொழிற்நுட்பமும், திரைக்கதையில் மாற்றமும் செய்தால், பாகுபலி தயார்! எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா இருவருமே, இரட்டை வேடத்தில் நடித்த படம், அடிமைப் பெண். இப்படத்தின் படப்பிடிப்பில் தான், எம்.ஜி.ஆரின் அடையாளமாக உள்ள வெள்ளை தொப்பியை, அணிய துவங்கினார். பாடகர், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அறிமுகமானப் படம்.

ஜெய்ப்பூர், ஓகேனக்கல் நீர் வீழ்ச்சி, ராஜஸ்தான், ஊட்டி போன்ற இடங்களில், இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. கே.வி.மகாதேவன் இசையில், ஆயிரம் நிலவே வா, காலத்தை வென்றவன் நீ, தாயில்லாமல் நானில்லை... போன்ற பாடல்கள், படத்திற்கு இனிமை சேர்ந்தன. கூன் விழுந்த வேங்கையன் கதாபாத்திரத்தில், எம்.ஜி.ஆரை கண்ட ரசிகர்கள் திகைத்தனர். பின், வீரனாக மாறி, எதிரிகளை வதைக்கும்போது, கூக்குரலிட்டு, மகிழ்ந்தனர். கதாநாயகியாகவும், பட்டத்து ராணி பவளவல்லி என, வில்லியாகவும், ஜெயலலிதா பட்டையை கிளப்பியிருப்பார்.

செங்கோடனாக, கொடிய வில்லன் பாத்திரத்தில், அசோகன் பிரமாதப்படுத்தியிருப்பார். இப்படத்தில் இடம்பெற்ற சண்டை காட்சிகள், இன்றும் ஆச்சரியத்துடன் பேசப்படுகின்றன. எங்க வீட்டுப் பிள்ளை படத்தின் வசூல் சாதனையை முறியடித்து, புதிய சாதனை படைத்தது, அடிமைப்பெண். வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல, திரைக்கதை இருக்கும்... அடிமைப் பெண் பாருங்கள்!

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா?அதே கண்கள்மறக்க முடியுமா?அதே கண்கள் மறக்க முடியுமா? - இரு கோடுகள் மறக்க முடியுமா? - இரு கோடுகள்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in