Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா?அதே கண்கள்

21 மார், 2020 - 10:27 IST
எழுத்தின் அளவு:
maraka-mudiyuma

வெளியான ஆண்டு: 1967


நடிகர்கள் : ரவிசந்திரன், காஞ்சனா, எஸ்.ஏ.அசோகன், பாலாஜி


இயக்கம் : ஏ.சி.திருலோகச்சந்தர்


தயாரிப்பு : ஏ.வி.எம்.,


'க்ரைம் த்ரில்லர்' என்றால், படத்தின் இடைவேளைக்குள் வில்லன் யார் என, ரசிகர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என, சினிமா விமர்சகர்கள் கூறுவர். ஆனால், படத்தின் இறுதி நிமிடத்தில் தான், கொலைகளுக்கான காரணம் என்ன, வில்லன் யார் என்ற புதிரை விடுவித்த படம், அதே கண்கள்.


படம் துவங்கும்போது, 'ரசிகர்கள், இப்படத்தின் முடிவை, புதிதாக படம் பார்க்க வரும் யாரிடமும் தயவுசெய்து சொல்ல வேண்டாம்...' என, அறிவித்தனர். ஏனெனில், அந்த காட்சி தான், படத்தை தாங்கி நிற்கும். ஹாலிவுட் இயக்குனர் ஆல்பிரட் ஹிட்ச்காக் இயக்கிய, திகில் திரைப்படங்கள், ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றன. அவரது படங்கள் போன்று, தமிழில், திகில் படத்தை தயாரிக்க வேண்டும் என, ஏ.வி.எம்., நிறுவனம் விரும்பியது.


படத்தில், எஸ்.ஏ.அசோகன் குடும்பத்தில் உள்ள, நான்கு சகோதரர்களும் அடுத்தடுத்து மர்மமான முறையில் கொலை செய்யப்படுவர். அக்குடும்ப உறுப்பினரான காஞ்சனாவின் காதலர், ரவிசந்திரன், கொலைகாரனை கண்டுபிடிக்க முயற்சிப்பார்.'இவர் தான் கொலைகாரன்' என, ரசிகர்கள் நினைக்கும்போது, அந்த நபர் கொலை செய்யப்படுவார். இதனால் ரசிகர்கள், இறுதி காட்சி வரை, 'சஸ்பென்ஸ்' உடன் காத்திருந்தனர்.


வேதாவின் இசையில், 'எத்தனை அழகு, 20 வயதினிலே, பூம் பூம் மாட்டுக்காரன், வா அருகில் வா...' போன்ற பாடல்கள், தமிழகம் முழுவதும் பட்டைய கிளப்பியது.ஒரு காட்சியில் கொலைகாரனின் கண்களை மட்டும், ரவிசந்திரன் பார்த்துவிடுவார். இதையடுத்து, 'யார் கொலைகாரன்' என்பதை கண்டறிய, சந்தேகப்படும் நபர்களை வரிசையாக நிற்கவைத்து, அவர்களது கண்களை மட்டும், ஹீரோ உற்று பார்ப்பார். அதே கண்களை கண்டுபிடிப்பார். அந்த கொலையாளி யார் என்றால்... படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா?  குழந்தையும் தெய்வமும்மறக்க முடியுமா? குழந்தையும் ... மறக்க முடியுமா? அடிமைப் பெண் மறக்க முடியுமா? அடிமைப் பெண்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in