Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? - எங்க வீட்டுப் பிள்ளை

13 மார், 2020 - 12:47 IST
எழுத்தின் அளவு:
Marakkamudiyuma---Enga-veetu-pillai

வெளியான ஆண்டு: 1965
நடிகர்கள்: எம்.ஜி.ஆர்., சரோஜாதேவி, நம்பியார்
இயக்கம்: சாணக்யா
தயாரிப்பு: பி.நாகி ரெட்டி

கடந்த, 1958ல் வெளியான நாடோடி மன்னன் படத்தின் வசூலை, 1965ல் வெளியான, எங்க வீட்டுப் பிள்ளை தான் முறியடித்தது. ஒரே தோற்றமுடைய சகோதரர்கள், ஆள் மாறாட்டம் செய்யும், பழைய கதை தான்... ஆனால், அது எம்.ஜி.ஆருக்கு கன கச்சிதமாக பொருந்தியது.

ராமுவை கோழையாக வளர்த்து, அவரின் சொத்துக்களை, மைத்துனர் நம்பியார் அனுபவிப்பார். நம்பியாரின் கொடுமை தாங்காமல், ராமு வீட்டில் இருந்து வெளியேறுவார். மறுபுறம், இளங்கோ என்பவர், வீரனாக வளர்கிறார். சந்தர்ப்ப சூழ்நிலையால், இருவரும் இடம் மாறுகின்றனர். இதனால் நிகழும் மாற்றாங்களே கதைகளம்.

'ராமு, இளங்கோ' என, இரு கதாபாத்திரங்களிலும், எம்.ஜி.ஆர்., புகுந்து விளையாடி இருப்பார். அப்பாவி ராமுவாக, நம்பியாரிடம் அடி வாங்கும் போது, 'அட, எம்.ஜி.ஆரா இது' என விமர்சகர்களை ஆச்சரியப்பட வைப்பார். அதே நேரம், ஆள் மாறாட்டம் வழியாக வரும் இளங்கோ, நம்பியாரை சவுக்கால் அடிக்கும் போது, தன் ரசிகர்களை கொண்டாட வைத்தார்.

தெலுங்கில், என்.டி.ராமராவ் நடிப்பில் வெளியான, ராமுடு பீமுடு படத்தின், 'ரீமேக்' தான் இப்படம். ஹிந்தியில், திலிப்குமார் நடிப்பில், ராம் அவுர் ஷ்யாம் என, வெளியானது. எங்க வீட்டுப்பிள்ளை படப்பிடிப்பு, 45 நாட்களில் நிறைவடைந்தது. பட பூஜை போட்ட இரண்டே மாதத்தில் வெளியானது. மாடிப்படியில் ஏறியும், இறங்கியும் சவுக்கால் நம்பியாரை வெளுத்து வாங்கும் போது, 'நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்...' என்ற பாடல் இடம் பெறும்; இதற்காகவே, எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம், எங்க வீட்டுப்பிள்ளை படத்தை!

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - புதிய பறவைமறக்க முடியுமா? - புதிய பறவை மறக்க முடியுமா?  குழந்தையும் தெய்வமும் மறக்க முடியுமா? குழந்தையும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

vns - Delhi,இந்தியா
13 மார், 2020 - 19:11 Report Abuse
vns " நான் ஆணையிட்டால்" பாட்டு தமிழ்ப் பட பாடல்களில் உயர்ந்த 30 பாடல்களில் ஒன்று என்பது என்னுடைய கருத்து.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in