Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? - புதிய பறவை

07 மார், 2020 - 11:55 IST
எழுத்தின் அளவு:
puthiyaparavai

புதிய பறவைவெளியான ஆண்டு: 1964
நடிகர்கள்: சிவாஜிகணேசன், சரோஜா தேவி, எம்.ஆர்.ராதா, சவுகார் ஜானகி
இயக்கம்: தாதா மிரா
சிதயாரிப்பு: சிவாஜி பிக்சர்ஸ்

தான் கொலை செய்த மனைவி, மீண்டும் வந்தால், கணவனின் நிலை என்ன? என்ற, கருவில் உருவானது, புதிய பறவை. காதலும், த்ரில்லரும் கலந்த இப்படம், தமிழ் சினிமா வரலாற்றில், தனி இடம் பிடித்திருக்கிறது.சேஸ் எ குரூக்டு ஷேடோ என்ற, ஹாலிவுட் படத்தை தழுவியது, சேஷாங்கா என்ற வங்கமொழி படம். இப்படத்தை தழுவி, புதிய பறவை உருவானது. இப்படம், தமிழில் உருவாக வேண்டும் என, சிவாஜிகணேசனே, மிகுந்த பொருட்செலவில் தயாரித்தார். இது தான், அவர் தயாரித்த முதல் படம்.ஹிந்தி, வங்காளப் படங்களின் இயக்குனர், தாதா மிராஸியை, இப்படத்தின் மூலம், தமிழுக்கு அழைத்து வந்தார் சிவாஜிகணேசன்.


எங்கள் ஆதர்ச கதாநாயகன், கொலைகாரனா? என, ரசிகர்கள் முதலில், இப்படத்தை ஏற்க மறுத்தனர். சில நாட்களுக்கு பின், திரைக்கதையின் நுட்பத்தை கண்டு வியந்து, பெரும் வெற்றி பெற செய்தனர்.ஒளிப்பதிவும், எடிட்டிங்கும், ஹாலிவுட் படங்களுக்கு நிகராக இருந்தன. விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில், உன்னை ஒன்று கேட்பேன், பார்த்த ஞாபகம் இல்லையோ, சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து, ஆஹா மெல்ல நட மெல்ல நட, எங்கே நிம்மதி என, அனைத்து பாடல்களும், இன்றும் காற்றில் தவழ்ந்துகொண்டே இருக்கின்றன.


எங்கே நிம்மதி... பாடலுக்கு, 300-க்கும் மேற்பட்ட இசைக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.ஸ்டைல், நடை, பரிதாபம், குழப்ப நிலை என, சிவாஜி கணேசன் என்ற, நடிப்பு யானைக்கு, சரியான தீனி கிடைத்த படம், இது!இப்படத்தில், சிவாஜிகணேசனின் நடிப்புக்கு இணையாக, வேறொருவரின் நடிப்பு சிலாகிக்கப்பட்டது; அவர், சவுகார் ஜானகி. கிளப் பாடகி கதாபாத்திரத்தில், சவுகார் ஜானகி, அசாத்தியமான முகம் காட்டிருப்பார். ரசித்து, ரசித்து, ஒரு த்ரில்லர் படம் பார்க்க வேண்டுமா... புதிய பறவை பாருங்கள்!

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - திருவிளையாடல்மறக்க முடியுமா? - திருவிளையாடல் மறக்க முடியுமா? - எங்க வீட்டுப் பிள்ளை மறக்க முடியுமா? - எங்க வீட்டுப் பிள்ளை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

gkrishna - chennai,இந்தியா
10 மார், 2020 - 11:25 Report Abuse
gkrishna சரோஜாதேவியை சந்தித்து விட்டு சந்தோசமாக வரும் சிவாஜியின் முகம் எம் ஆர் ராதாவின் குரல் கேட்டவுடன் மாறும் பாருங்க சிவாஜியின் முகம். என்ன ஒரு எஸ்பிரஸின். செம இதுக்கு போட்டியாக தான் அந்நாளில் அன்பே வா உருவானது அப்படின்னு அந்நாட்களில் பத்திரிகைகளில் வதந்தி உண்டு
Rate this:
Vijay Kumar - Manama,பஹ்ரைன்
08 மார், 2020 - 12:27 Report Abuse
Vijay Kumar This old is (pure) Gold and it cannot be re-produced by any of the present so called genius.
Rate this:
Thalaivar Rasigan - CHENNAI,இந்தியா
08 மார், 2020 - 07:33 Report Abuse
Thalaivar Rasigan டிவியில் ஒரு தடவை புதிய பறவை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. எல்லா நல்ல ஹிட் பாடல்களும் ஒரே படத்தில் இருப்பதை கண்டு ஆச்சர்யப்பட்டேன்.
Rate this:
07 மார், 2020 - 22:35 Report Abuse
Randy Ranjit Thanks the information. thanks Dinamalar
Rate this:
chennai sivakumar - chennai,இந்தியா
07 மார், 2020 - 12:30 Report Abuse
chennai sivakumar One of the best movies in regard to acting, photography, music, direction and dialogues. Doubt any movie like this can be produced in future.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in