Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? - திருவிளையாடல்

07 மார், 2020 - 11:53 IST
எழுத்தின் அளவு:
thiruvilayadal

திருவிளையாடல்வெளியான ஆண்டு: 1965
நடிகர்கள்: சிவாஜிகணேசன், சாவித்திரி, டி.எஸ்.பாலையா, டி.ஆர்.மகாலிங்கம்,நாகேஷ்.
இயக்கம்: ஏ.பி.நாகராஜன்
தயாரிப்பு: ஸ்ரீவிஜயலட்சுமி பிக்சர்ஸ்


நீரே, முக்கண் முதல்வனாயினும் ஆகுக... உமது நெற்றியில், ஒரு கண் காட்டிய போதிலும், உமது உடம்பெல்லாம் கண்ணாக்கிச் சுட்டபோதிலும், குற்றம் குற்றமே இதை படிக்கும்போதே, உணர்ச்சி மேலிடுகிறதா... அது தான், வசனம்!கடந்த, 1965 முதல், பல ஆண்டுகள், திருவிளையாடல் படத்தின் ஒலிச்சித்திரம் கேட்காத கிராமங்களே இல்லை எனும் அளவிற்கு, பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பிய படம்.பழத்திற்காக சண்டை போட்டு, கோபமடைந்து செல்லும் முருகருக்கு, அவரின் தாய் பார்வதி, சிவனின் திருவிளையாடல் குறித்து, விளக்கிக் கூறி, சமாதானப் படுத்துவதே கதை. இதற்காக, திருவிளையாடல் புராணத்தில் உள்ள, 64 தொகுப்புகளில் இருந்து, நான்கு கதைகளை மட்டும் எடுத்து, இப்படத்தில் தொகுத்திருப்பர்.


சிவனாக, சிவாஜிகணேசன்; பார்வதியாக, சாவித்திரி நடித்திருப்பர். இப்படத்தின் இயக்குனர், ஏ.பி.நாகராஜன் தான், நக்கீரன் வேடத்தில் நடித்திருப்பார். ஹேமநாத பாகவதராக, டி.எஸ்.பாலையாவும்; தருமியாக நாகேஷும், நடிப்பில் பெரும் வெற்றிக்கொடியை நாட்டியிருப்பர்.கண்ணதாசனின் வரிகளுக்கு, கே.வி.மகாதேவன் இசையமைத்திருந்தார். கே.பி.சுந்தராம்பாள், பாலமுரளிகிருஷ்ணா, டி.ஆர்.மகாலிங்கம், டி.எம்.சவுந்தரராஜன் ஆகியோர் குரல்களில், பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா, இன்றொறு நாள் போதுமா, இசைத்தமிழ் நீ செய்த, பாட்டும் நானே... என்பது உட்பட, படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் முத்துகள்!பகுத்தறிவு என்ற பெயரில், ஹிந்துக்களுக்கு எதிராக பிரசாரம் தீவிரமாக நடந்தபோது, திருவிளையாடல் வெளிவந்து, இது ஆன்மிக மண் என்பதை, அழுத்தம் திருத்தமாக பறைசாற்றியப் படம்!

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - ஆயிரத்தில் ஒருவன்மறக்க முடியுமா? - ஆயிரத்தில் ஒருவன் மறக்க முடியுமா? - புதிய பறவை மறக்க முடியுமா? - புதிய பறவை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

09 மார், 2020 - 22:10 Report Abuse
Karthikeyan Subramanian இன்றும் எனது வீட்டில் CD உள்ளது.... மிக மிக அருமையான படம்.... Particularly nagesh sir Acting... Chanceless.... தருமி கேரக்டர்...
Rate this:
ramesh babu - chennai,இந்தியா
09 மார், 2020 - 17:42 Report Abuse
ramesh babu சின்ன வயசுல ஊரு திருவிழா இந்த படத்தோட கதையை எத்தனை முறை கேட்டேன்னு கணக்கு இல்ல , ஒவ்வொரு முறையும் சலிக்கமா இருக்கும் ...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in