Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? - ஆயிரத்தில் ஒருவன்

29 பிப், 2020 - 12:28 IST
எழுத்தின் அளவு:
Marakka-Mudiyuma-:-Aayirathil-Oruvan

படம்: ஆயிரத்தில் ஒருவன்
வெளியான ஆண்டு: 1965
நடிகர்கள்: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, நம்பியார், நாகேஷ்
இயக்கம்: பி.ஆர்.பந்துலு
தயாரிப்பு: பத்மினி பிக்சர்ஸ்

'மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?' 'சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்' . ஆயிரத்தில் ஒருவன் படத்தில், இந்த வசனத்தை கேட்கும்போது, ரசிகர்கள் சிலிர்த்துக் கொள்வர். ஆம்... ஒரு படத்தின் வெற்றிக்கு, வசனங்களும் மிக முக்கியம்.

கப்பலோட்டிய தமிழன், வீர பாண்டிய கட்டபொம்மன், கர்ணன் போன்ற தரமான படங்களை தயாரித்து இயக்கியவர், பி.ஆர்.பந்துலு. ஆனால், அப்படங்களுக்கு, அன்றைய மக்கள் பெரும் வெற்றியை தரவில்லை. பொருளாதார சிக்கலில் சிக்கிய, பி.ஆர்.பந்துலுவிற்கு, கரம்கொடுத்தவர், எம்.ஜி.ஆர். ஹாலிவுட் படத்திலிருந்து தழுவிய கதை, ஆயிரத்தில் ஒருவன். அது, எம்.ஜி.ஆருக்கு, கச்சிதமாக பொருந்தியது.

இப்படத்தில் நடிப்பதற்காக, 1 ரூபாய் மட்டுமே, எம்.ஜி.ஆர்., முன்பணமாக பெற்றுக்கொண்டார். படம் வெளியாகி வெற்றி பெற்ற பின், பி.ஆர்.பந்துலு, தானே சென்று, எம்.ஜி.ஆருக்கு சம்பளம் கொடுத்தார். அதுவரையில், அவர் சம்பளம் கேட்கவில்லை. எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா முதலில் இணைந்து நடித்த படம் என்ற பெருமையும் உண்டு. விஸ்வநாதன், ராமமூர்த்தி இணைந்து இசையமைத்த கடைசிப்படம் என்ற, சோகமும் உண்டு.

தீவு ஒன்றில், அடிமைகளின் தலைவனாக இருக்கும் எம்.ஜி.ஆர்., அங்கிருந்து மீண்டு, கொள்ளையர் கூட்டத்தில் சிக்கி, இறுதியில் அனைவரிடமும் வெற்றி பெற்று, தாய்நாட்டிற்கு எப்படி செல்கிறார் என்பதே, கதை சுருக்கம். கண்ணதாசன், வாலி ஆகியோர் வரிகளில், 'பருவம் எனது பாடல், ஏன் என்ற கேள்வி, ஓடும் மேகங்களே, உன்னை நான் சந்தித்தேன், அதோ அந்தப் பறவை போல...' என, அத்தனை பாடல்களும் தேன்.

நம்பியாரும், எம்.ஜி.ஆரும் போடும் கத்திச் சண்டையில் அனல் பறக்கும். ஆர்.கே.சண்முகத்தின் வசனத்தில் பொறி கிளம்பும். மொத்தத்தில், வசூலில் சூறாவளியை நிகழ்த்தியது, ஆயிரத்தில் ஒருவன்!

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா...? - பொம்மைமறக்க முடியுமா...? - பொம்மை மறக்க முடியுமா? - திருவிளையாடல் மறக்க முடியுமா? - திருவிளையாடல்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Krish - Chennai ,இந்தியா
02 மார், 2020 - 05:44 Report Abuse
Krish நமக்கு வாய்த்த அடிமைகள் என்ற வசனத்தையும் விட்டு விட்டீர்கள். . முதல் காட்சியே வெற்றி வெற்றி என்று ஆரம்பிக்கும்,. பாடல்கள் நகைசுவை, பார்க்க விரும்பும் ரத்தமில்லாத சண்டைகள் . ஆயிரம் சொல்லலாம்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in