Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா...? - பொம்மை

28 பிப், 2020 - 14:52 IST
எழுத்தின் அளவு:
Marakka-Mudiyuma---Bommai-Film

படம்: பொம்மை
வெளியான ஆண்டு: 1964
நடிகர்கள்: எஸ்.பாலசந்தர்,
விஜயலட்சுமி, வி.எஸ்.ராகவன்
இயக்கம்: வீணை எஸ்.பாலசந்தர்
தயாரிப்பு: எஸ்.பி., கிரியேஷன்ஸ்

கதை, திரைக்கதை, வசனம், இசை, தயாரிப்பு மற்றும் இயக்கம் என படத்திற்கான அனைத்துப் பொறுப்பையும் ஏற்றார், வீணை எஸ்.பாலசந்தர். இப்படம், ஹாலிவுட் இயக்குனர், ஆல்பிரட் ஹிட்ச்காக்-கின், சபடாஜ் என்ற படத்தின் தழுவல்.

ஒரே நாளில் நடக்கும் கதைக்களம். ஒரு பொம்மைக்குள் இருக்கும் வெடிகுண்டு, பலர் கைமாறி செல்கிறது என்பது தான், படத்தின் ஒரு வரி கதை. இதில் என்ன சுவாரஸ்யம் என்றால், 'ஓபன் சஸ்பென்ஸ்' எனும் திரைக்கதை தான். பொம்மையில் வெடிகுண்டு இருப்பது, ரசிகர்களுக்கு தெரியும்; கதாபாத்திரங்களுக்கு தெரியாது. அதனால் ரசிகர்கள், அப்படத்தோடு ஒன்றிணைந்தனர்.

இசையமைப்பிலும், வீணை எஸ்.பாலசந்தர் வித்தியாசம் காட்டியிருந்தார். இப்படத்தில் நடித்தவர்கள் அனைவரும், புதுமுகங்கள். பொம்மை படத்துடன், அன்றைய பிரபல நடிகர்களின் படங்களும் வெளியாகின; ஆனால், பொம்மை தான் வெற்றி பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற, 'நீயும் பொம்மை நானும் பொம்மை...' என்ற பாடல் வழியே, பாடகர், கே.ஜே.யேசுதாஸ் தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகமானார்.

பொம்மை படத்தின் இறுதிக் காட்சியில், படத்தில் பணியாற்றிய அத்தனை தொழில்நுட்ப கலைஞர்களையும், ரசிகர்களிடம், இயக்குனர் அறிமுகப்படுத்துகிறார்; இதுவும், புதுமையான முயற்சி. 'வித்தியாசமான கதைகளம் நிறைய இருக்கிறது' என, தமிழ் திரையுலகினருக்கு, வீணை எஸ்.பாலசந்தர் அறிவுறுத்திய படம், பொம்மை!

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா... சர்வர் சுந்தரம்மறக்க முடியுமா... சர்வர் சுந்தரம் மறக்க முடியுமா? - ஆயிரத்தில் ஒருவன் மறக்க முடியுமா? - ஆயிரத்தில் ஒருவன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in