Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா... - சபாஷ் மீனா

08 பிப், 2020 - 13:19 IST
எழுத்தின் அளவு:
Marakka-Mudiyuma-:-Sabash-meena

படம்: சபாஷ் மீனா
நடிகர்கள்: சிவாஜிகணேசன், சந்திரபாபு, எஸ்.வி.ரங்கராவ், சரோஜாதேவி.
வெளியான ஆண்டு: 1958
இயக்கம்: பி.ஆர்.பந்துலு
தயாரிப்பு: பத்மினி பிக்சர்ஸ்

சபாஷ் மீனா படத்தில், ஹீரோவை விட, காமெடியனுக்கு அதிக சம்பளம் என்பதில் இருந்தே புரிந்துகொள்ளலாம், இப்படம், நகைச்சுவையில் சுனாமியை ஏற்படுத்தியது என்பதை. சிவாஜிகணேசன், ஊதியத்தை விட, கதைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதையும், மேற்கண்ட சம்பவத்தில் அறிந்துகொள்ளலாம்.

பி.ஆர்.பந்துலு -- சிவாஜி இணையில் வெளிவந்த, நான்காவது படம்; 1958-ல் வெளியான, சிவாஜிகணேசனின் ஏழாவது படம், சபாஷ் மீனா. படத்தின் கதை, ப.நீலகண்டன். செல்வ செழிப்பில் பிறந்த சிவாஜிகணேசன், அவரின் நண்பர் சந்திரபாபு இருவரும், பணக்காரரான, ரங்காராவ் வீட்டில் நடத்தும், ஆள் மாறாட்டமே கதைக்களம். இதே கதையை, கொஞ்சம் காட்சிகளையும், அப்படியே பின்னாளில், உள்ளத்தை அள்ளித் தா என, 'ரீமேக்' செய்தார், சுந்தர்.சி.

சபாஷ் மீனாவில், சிவாஜிகணேசனுக்கு ஜோடியாக, மாலினி நடிக்க, சந்திரபாபுவுக்கு ஜோடியாக, எவ்வித மறுப்பும் சொல்லாமல்
நடித்தார், சரோஜா தேவி. சிவாஜிகணேசனின் நண்பர் மற்றும் ரிக் ஷா இழுக்கும் சென்னைவாசி என, இரட்டை வேடத்தில், சந்திரபாபு ரகளை செய்திருப்பார். அவரது, 'சென்னைத் தமிழ்' அப்போது, தமிழகம் முழுவதும் பிரபலம்!

டி.ஜி.லிங்கப்பா இசையில், 'சித்திரம் பேசுதடி...' போன்ற பாடல்கள், படத்தின் வெற்றிக்கு துணை புரிந்தன. நினைத்து நினைத்து சிரிக்கவைக்கும் சபாஷ் மீனா படத்தை, எப்போதும் பார்க்கலாம்!

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா... - பாசமலர்மறக்க முடியுமா... - பாசமலர் மறக்க முடியுமா... சர்வர் சுந்தரம் மறக்க முடியுமா... சர்வர் சுந்தரம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in