Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா... - பாசமலர்

08 பிப், 2020 - 12:58 IST
எழுத்தின் அளவு:
Marakka-Mudiyuma-:-Pasamalar-movie

படம்: பாசமலர்
நடிகர்கள்: சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி
வெளியான ஆண்டு: 1961
இயக்கம்: ஏ.பீம்சிங்
தயாரிப்பு: ராஜாமணி பிக்சர்ஸ்

'அவங்க ரெண்டு பேரும், பாசமலர், சிவாஜி கணேசன் - சாவித்திரி மாதிரி' என, பாசமுடன் வாழும், அண்ணன் - தங்கையை பார்த்து பலரும் இன்றும் சொல்வர். 70 ஆண்டுகள் ஆனாலும், இன்னும் சகோதரப் பாசத்திற்கு எடுத்துக்காட்டாக விளக்கும் படம், பாசமலர். அண்ணனாக, சிவாஜி கணேசன்; தங்கையாக, சாவித்திரி; கணவராக, ஜெமினி கணேசனும் நடித்திருப்பர். மலையாள எழுத்தாளர், கே.பி.கொட்டாரக்கரா கதைக்கு, வசனம் எழுதியவர், ஆரூர்தாஸ்.எம்.ஜி.ஆர்., படங்களுக்கு வசனம் எழுதிக் கொண்டிருந்த இவரை, சிவாஜி கணேசனுக்கு அறிமுகம் செய்து வைத்தவர், ஜெமினி கணேசன். இப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அவரின் படங்களுக்கும், ஆரூர்தாஸ் தான் வசன எழுத்தாளர்.

திரையரங்கங்களில் இருந்து கண்ணீரோடு வெளி வந்த மக்களின், பேராதரவோடு, இப்படம், 25 வாரங்கள் ஓடியது. 'பா' வரிசை படங்களை இயக்கிய இயக்குனர் பீம்சிங், இப்படத்தில் தனித்துவமான முத்திரை பதித்தார். தெலுங்கு, ஹிந்தி, சிங்களம் ஆகிய மொழிகளில், இப்படம் உருவானது.

சிவாஜி கணேசனும், சாவித்திரியும் பல படங்களில், காதலர்களாகவும், தம்பதியாகவும் நடித்திருந்தனர். இப்படம் உருவாக்கிய அதிர்வலையில், இனி அவ்வாறு நடிப்பதில்லை என, முடிவெடுத்தனர். அந்தளவிற்கு இருவரும் இப்படத்தில், அண்ணன் - தங்கையாகவே வாழ்ந்திருப்பர்.

மெல்லிசை மன்னர்களின் இசைக்கு, கவிஞர் கண்ணதாசன் எழுதிய, 'மலர்ந்தும் மலராத பாதி மலர் போல...' பாடல், காவிய அந்தஸ்து பெற்றது. பாசமலர் போன்ற படங்கள், அவ்வப்போது வந்திருந்தால், அதன் கருத்தை ரசிகர்கள் ஏற்று வாழ்ந்திருந்தால், தமிழகத்தில் கூட்டுக் குடும்பங்கள் நிலைத்திருக்கும்!

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா... பாகப்பிரிவினைமறக்க முடியுமா... பாகப்பிரிவினை மறக்க முடியுமா... - சபாஷ் மீனா மறக்க முடியுமா... - சபாஷ் மீனா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

s t rajan - chennai,இந்தியா
08 பிப், 2020 - 14:14 Report Abuse
s t rajan நடிகையர் திலகத்திற்கு ஏன் இதுவரை "பத்ம" அவார்டு தரப்படவில்லை ? இவரைப் போன்ற இன்னொரு கலைஞரை இன்னும் இந்தியா காணவில்லை.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in