விக்ரமின் மகாவீர் கர்ணன் விரைவில் துவக்கம் ; இயக்குனர் அறிவிப்பு | உத்தரகண்ட் முதல்வரை சந்தித்த ஆதிபுருஷ் நாயகி ; பின்னணி இதுதான் | தெறி ஹிந்தி ரீமேக்கில் இணைந்த கீர்த்தி சுரேஷ்! | இந்தியாவில் ஹிந்தியில் மட்டும் 500 கோடி கடக்கும் 'ஜவான்' | 2 நாட்களில் ஐந்து மில்லியன் பார்வைகளை கடந்த திரிஷாவின் ‛தி ரோடு' டிரைலர்! | 'சந்திரமுகி 2' வெளியீடு தள்ளிப் போனது ஏன் ? | ஸ்கந்தா படத்திற்கு யு/ஏ சான்றிதழ்! | ஹாலிவுட் பட வாய்ப்பு - அட்லீ! | 7ஜி பிருந்தாவன் காலனி படத்தின் ரீ - ரிலீஸ் கலெக்ஷன் ரிப்போர்ட்! | கோட் சூட் லுக்கில் அஜித்தின் புதிய போட்டோ வைரல்! |
படம்: கல்யாண பரிசு
வெளியிடப்பட்ட ஆண்டு: 1959
நடிகர்கள்: ஜெமினி கணேசன், சரோஜாதேவி, விஜயகுமாரி
இயக்கம்: ஸ்ரீதர்
தயாரிப்பு: வீனஸ் பிக்சர்ஸ்
'கல்யாண பரிசு படத்தை, குறைந்தது இருமுறையாவது பார்த்தவர்கள் தான், தமிழகத்தில் இருப்பர்' என்பது, அன்றைய காலத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.இதன் வழியே, அப்படம் பெற்ற வெற்றியை உணரலாம்.
ஸ்ரீதர், இயக்குனராக அறிமுகமான படம். புதுமை இயக்குனராக, அன்றைய இளைஞர்களால் கொண்டாடப்பட்டார். ஜெமினிகணேசனும், சரோஜா தேவியும் காதலிப்பார்கள். தன் அக்கா, விஜயகுமாரிக்காக, சரோஜாதேவி தன் காதலை விட்டுக்கொடுப்பார். திருமணத்திற்கு பின், அக்கா
சந்தேகப்படுவதால், சரோஜாதேவி வீட்டில் இருந்து வெளியேறுவார். தங்கையின் தியாகத்தை உணர்ந்த விஜயகுமாரி, தான் இறக்கபோகும் நேரத்தில், ஜெமினிகணேசனிடம், தன் தங்கையை கண்டுபிடித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என, கூறுவார்.
ஜெமினிகணேசன் செல்லும்போது, சரோஜாதேவிக்கு திருமணம் நடைபெற்று கொண்டிருக்கும். ஜெமினிகணேசன், தன் குழந்தையை, அவர்களுக்கு கல்யாணப்பரிசாக கொடுக்கிறார். இப்படத்தில் இடம்பெற்ற, தங்கவேலுவின், 'மன்னார் அண்ட் கோ' நகைச்சுவை மிகவும் பிரபலமானது. படத்திற்கு இசை, ஏ.எம்.ராஜா. பாடல்கள், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். 'உன்னைக்கண்டு நானாட என்னைக்கண்டு நீயாட, துள்ளாத மனமும், வாடிக்கை மறந்ததும் ஏனோ...' போன்ற பாடல்கள், இன்றும் நினைத்தாலே இனிக்கும். ஹிந்தியில், நஸ்ரானா; தெலுங்கில், பெல்லி கனுகா; கன்னடத்தில், பிரேமபந்தனா என்ற பெயர்களில், கல்யாண பரிசு, 'ரீமேக்' செய்யப்பட்டது. கல்யாண பரிசு படத்திற்கு பின் தான், தமிழ் திரையுலம் இளமையின் பக்கம் பயணித்தது.