Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா... ஹரிதாஸ்

11 ஜன, 2020 - 13:16 IST
எழுத்தின் அளவு:
Marakka-Mudiyuma:-Haridas-movie

படம்: ஹரிதாஸ்
வெளியான ஆண்டு: 1944
நடிகர்கள்: எம்.கே.தியாகராஜ பாகவதர், டி.ஆர்.ராஜகுமாரி
இயக்கம்: சுந்தர் ராவ் நட்கர்னி
தயாரிப்பு: ராயல் டாக்கி டிஸ்டிரிபியூட்டர்ஸ்

தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் எம்.கே.தியாகராஜபாகவதர் நடித்த படம், ஹரிதாஸ். மூன்று தீபாவளி கண்ட இப்படத்தின் சாதனை, இன்று வரை முறியடிக்கப்படவில்லை. பணக்கார தம்பதியின் ஒரே மகனான ஹரிதாஸ், பெண் சபலம் உடையவன். திருமணத்திற்கு பின்பும் திருந்தாமல், ரம்பை எனும் விலைமாதுவுடன் தொடர்பு ஏற்படுகிறது. இதை கண்டித்து, அவரது பெற்றோர், வீட்டில் இருந்து வெளியேறுகின்றனர்.

ஹரிதாசின் சொத்துக்களை, ரம்பை அபகரித்துக் கொள்கிறாள். வீதிக்கு வந்தாலும் திருந்தாத ஹரிதாஸ், மேலும் சில பெண்களுடன் உல்லாசமாக இருக்கிறான். அவரை திருத்த முயற்சிக்கும், மாமுனிநாதனை எட்டி உதைக்க முயற்சிக்கிறான். இதனால், மாமுனிநாதரின் சாபத்தால், ஹரிதாஸ் கால்களை இழந்துவிடுகிறான். பின் மனம் திருந்தி, தன் பெற்றோருக்கு தொண்டு செய்து, சாபம் நீங்கி, மகிழ்ச்சி அடைகிறான். என்ன எங்கேயோ... பார்த்த கதையாக இருக்கிறதா? இதே பாணியில், ரத்தக்கண்ணீர் வெளியானது. ஹரிதாஸ், புராணம்; ரத்தக்கண்ணீர், பகுத்தறிவு... அவ்வளவு தான்!
இப்படத்திற்கு இசை, ஜி.ராமநாதன். பாடல்கள், பாபநாசம் சிவன். மொத்தம், 20 பாடல்கள். மன்மத லீலையை வென்றார் உண்டோ, கிருஷ்ணா முகுந்தா முராரே.. போன்ற, கிளாசிக் பாடல்கள் இடம் பெற்றன.

ஹரிதாஸ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே, 14 படங்களில் நடிக்க, எம்.கே.தியாகராஜ பாகவதர், புக் ஆகியிருந்தார். ஆனால், லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிக்கி, சிறை சென்றார் என்பது, தனி வரலாறு. பாகவதர் சிகையலங்காரம், அன்றைய காலத்தில் வெகுபிரபலம். அன்றைய இளைஞர்கள் பலரும், அதுபோலவே தம் சிகையை அலங்கரித்துக் கொண்டனர். உங்கள் வீட்டில், பழைய படங்கள் இருந்தால் தேடி பாருங்கள், முன்னோர் யாராவது, அந்த சிகை அலங்காரத்தில் இருக்கலாம்!

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்கமுடியுமா... சூரியகாந்திமறக்கமுடியுமா... சூரியகாந்தி மறக்க முடியுமா... அலிபாபாவும் 40 திருடர்களும் மறக்க முடியுமா... அலிபாபாவும் 40 ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

vasumathi - Sindhathari Pettai ,இந்தியா
15 ஜன, 2020 - 07:14 Report Abuse
vasumathi நல்ல கருத்துள்ள படம். பெண் திரும்ப வரும்போது, பெற்றோர் திருப்பி அனுப்புவது உட்பட,.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in