Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்கமுடியுமா... சூரியகாந்தி

10 ஜன, 2020 - 12:21 IST
எழுத்தின் அளவு:
Marakka-mudiyuma:-Suryakanthi-film

படம்: சூரியகாந்தி
வெளியான ஆண்டு: 1973
நடிகர்கள்: ஜெயலலிதா, முத்துராமன், சாவித்திரி, மேஜர் சுந்தர்ராஜன்
இயக்கம்: முக்தா சீனிவாசன்
தயாரிப்பு: எம்.வேணுகோபால்

கணவனை விட, மனைவி அதிகம் சம்பாதிக்க, குடும்பத்தில் ஏற்படும் விரிசல்கள் தான், சூரியகாந்தி படத்-தின் ஒரு வரிக் கதை!

படத்தின் முதன்மை கதாபாத்திரம், ஜெயலலிதாவிற்கு. படத்தை, தன் தோள்களில் தாங்கியிருப்பார். இப்படத்தில் நடித்ததற்காக, சிறந்த தமிழ் நடிகைக்கான, 'பிலிம்பேர் விருது' அவருக்கு கிடைத்தது. தாழ்வு மனப்பான்மை உடைய கணவன் கதாபாத்திரத்தை, வேறு யாரும் செய்யமுடியாத அளவிற்கு, முத்துராமன் ஜொலித்திருப்பார்.

'நடிகையர் திலகம்' என போற்றப்பட்ட சாவித்திரி, இப்படத்தில், முத்துராமனின் அம்மாவாக, சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்; எல்லாம், காலத்தின் கோலம்! குடும்பத்திற்குள் சுழலும் திரைக்கதையில், அத்தனை பரபரப்பும், சுவாரசியமும் இருக்கும். ஒவ்வொரு வீட்டிலும், ஒரு சிறந்த கதை உள்ளது. அதை சுவாரசியமாக, ரசிகர்களுக்கு பயனுள்ள வகையில், படமாக தந்தது, அன்றைய திரைத்துறை.

எம்.எஸ்.விஸ்வநாதன் - கண்ணதாசன் கூட்டணி, வழக்கம்போல பாடல்களில் பட்டையை கிளப்பி-யது. இந்த படத்தின் பாடல்களில், பல சுவாரசியங்கள் உண்டு. 'பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பு கேட்டது' பாடலுக்கு, கவிஞர் கண்ணதாசன் நடித்து இருந்தார். 'ஓமேரே துல்ருபா' பாடலை, ஜெயலலிதாவும்; 'தெரியாதோ நோக்கு தெரியாதோ' பாடலை, மனோரமாவும் சொந்த குரலில் பாடி இருந்தனர்.

'நான் என்றால், அது அவளும் நானும்' பாடலை, எஸ்.பி.பாலசுப்ரமணியமும், ஜெயலலிதாவும் இணைந்து பாடி இருந்தனர். இன்றைய காலகட்டத்தில், கணவன் - மனைவி இருவருமே, வேலைக்கு செல்லவேண்டிய நிலை உள்ளது. அவ்வகையில், இப்படம் இன்றும், பெண்களுக்கு தன்னம்பிக்கையும், ஆண்களுக்கு பாடத்தையும் தரும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா... நாடோடி மன்னன்மறக்க முடியுமா... நாடோடி மன்னன் மறக்க முடியுமா... ஹரிதாஸ் மறக்க முடியுமா... ஹரிதாஸ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in