Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா... நாடோடி மன்னன்

07 ஜன, 2020 - 14:55 IST
எழுத்தின் அளவு:
Marakka-mudiyuma-:-Andha-naal-movie

படம்: நாடோடி மன்னன்
வெளியான ஆண்டு: 1958
நடிகர்கள்: எம்.ஜி.ஆர்., பானுமதி, சரோஜாதேவி,
எம்.என்.நம்பியார்
இயக்கம்: எம்.ஜி.ஆர்.,
தயாரிப்பு: எம்.ஜி.ஆர்., பிக்சர்ஸ்

'இந்த படம் ஓடினால், நான் மன்னன்; ஓடாவிட்டால், நாடோடி' என, எம்.ஜி.ஆர்., தெரிவித்தார். படம் வெற்றி பெற்றதும்; எம்.ஜி.ஆர்., தமிழகத்தின் மன்னரானதும் வரலாறு! வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்துவந்த எம்.ஜி.ஆருக்கு, 'இப் ஐ வேர் கிங்' படத்தை போல, தமிழில் உருவாக்க ஆசைப்பட்டார்.

யானையை கட்டி தீனி போடுவது போல, இப்படத்திற்கு பணத்தை, தண்ணீராய் செலவழித்தார். மிகப்பெரிய பொருட்செலவில் உருவானது. பலமுறை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டும், படத்தை வெளியிட முடியவில்லை. பல இடையூறுகளை தாண்டி, 1958 ஆக., 22ல் படம் வெளியானது. பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. மெகா ஹிட்டான இந்த படம், எம்.ஜி.ஆரின், திரையுல வாழ்க்கையில் முக்கிய திருப்பமாக அமைந்தது.

மன்னர் மார்த்தாண்டன் போல, உருவ ஒற்றுமை உடையவர், போராளி வீராங்கன். மார்த்தாண்டனை, சூழ்ச்சியான ராஜகுரு ஆட்கள் கடத்திவிட, வீராங்கன், மன்னராக நடிப்பார். நாட்டில் சீர்திருத்தங்கள் செய்து, மார்த்தாண்டனை மீட்பார். இந்த கதை, பலமுறை, தமிழ் சினிமாவில், 'வடை' போல திரும்ப திரும்ப சுடப்பட்டது. நாடோடி மன்னன் படத்திற்கு, கண்ணதாசனும், ரவீந்தரும் வசனம் எழுதினர். இசை, எஸ்.எம்.சுப்பைய்யா நாயுடு.

'துாங்காதே தம்பி துாங்காதே... காடு வெளஞ்சென்ன மச்சான்...'' போன்ற, காலத்தால் அழியாத பாடல்களை எழுதியிருந்தார், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். எம்.ஜி.ஆர்., தமிழகத்தின், 'கிங்' என பறைசாற்றியப் படம், நாடோடி மன்னன்!

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா... எதிர் நீச்சல்மறக்க முடியுமா... எதிர் நீச்சல் மறக்கமுடியுமா... சூரியகாந்தி மறக்கமுடியுமா... சூரியகாந்தி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in