Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா... ரத்தக் கண்ணீர்

07 ஜன, 2020 - 14:49 IST
எழுத்தின் அளவு:
Marakka-mudiyuma-:-Ratha-kanneer-movie

படம்: ரத்தக் கண்ணீர்
வெளியான ஆண்டு: 1954
நடிகர்கள்: எம்.ஆர்.ராதா,
எஸ்.எஸ்.ராஜேந்திரன், சந்திரபாபு
இயக்கம்: கிருஷ்ணன் - -பஞ்சு
தயாரிப்பு: 'நேஷனல் பிக்சர்ஸ்'
வசனம்: திருவாரூர் கே.தங்கராசு

தமிழ் திரையுலகில், நிஜ வாழ்வில் நடிக்காத மாபெரும் கலைஞன், எம்.ஆர்.ராதா; வில்லத்தனத்தையே ரசிக்க வைத்தவர். வில்லனை, முதன்மை கதாபாத்திரமாக உருவாக்கி, நாடக மேடைகளில், 3,500 முறைக்கு மேல் அரங்கேற்றியது, ரத்தக்கண்ணீர்.

வெளிநாட்டில் படித்து முடித்து, இந்தியா திரும்பும், மோகன் என்ற கதாபாத்திரத்தில், பின்னி பெடலெடுத்திருப்பார், எம்.ஆர்.ராதா. அவரின் செல்வத்தை பறிக்கும், காந்தா கதாபாத்திரத்தில், எம்.என்.ராஜம் நடித்திருந்தார். இந்தியா திரும்பியதும், மது, மாது என, ஜாலியாக சுற்றித்திரிவார்.

திருந்திவிடுவார் என நினைத்து, மோகனுக்கு திருமணம் செய்து வைப்பர். ஆனால் அவர் திருந்தாமல், பழையபடியே உல்லாச வாழ்க்கையில் ஈடுபடுவார். கொஞ்ச நாளில் அவருக்கு, குஷ்ட நோய் வந்து விடும் அதன் பின் காந்தா, அவரிடம் இருந்து விலகி, வேறொரு பணக்காரருடன் உல்லாசமாக இருப்பார். நோயுடன், பிச்சைக்காரராக மாறும் மோகன், தன் மனைவியிடமே, பிச்சை கேட்கும் நிலைக்கு ஆளாவார். மனைவியை, தன் நண்பருக்கு திருமணம் செய்து வைப்பார்.

கடந்த, 1950களில், இத்தகைய கருத்துடன் அரங்கேறிய நாடகமும், படமும், பலத்த எதிர்ப்பை சந்தித்தன. ஆனால் மக்களிடம் பேராதரவோடு, பெரும் வெற்றியை பெற்றது. ரத்தக்கண்ணீர் பழைய படம் அல்ல; எப்போதும் புதிய படம்!

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா... பராசக்திமறக்க முடியுமா... பராசக்தி மறக்க முடியுமா... நெஞ்சில் ஓர் ஆலயம் மறக்க முடியுமா... நெஞ்சில் ஓர் ஆலயம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in