Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா... முகமது பின் துக்ளக்

07 ஜன, 2020 - 14:44 IST
எழுத்தின் அளவு:
Marakka-mudiyuma-:-mohammed-bin-thuglak-movie

படம்: முகமது பின் துக்ளக்
வெளியான ஆண்டு: 1971
நடிகர்கள்: சோ, மனோரமா
இயக்கம்: சோ
தயாரிப்பு: பிரஸ்டிஜ் புரொடக் ஷன்ஸ்

என்றைக்கும் உள்ள அரசியல் அவலத்தை, அன்றைக்கே தோலுரித்து காட்டிய படம், முகமது பின் துக்ளக். நாடகத்தில் இருந்து சினிமாவாக மாறியது. தவறான அரசியல்வாதிகளை, மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர் என்பதை உணர்த்துவதற்காக, முகலாய மன்னன் முகமது பின் துக்ளக் மீண்டும் பிறந்துள்ளதாக, நாடகத்தை அரங்கேற்றுகின்றனர், சோ, பீலிசிவம், நீலகண்டன் குழுவினர்.

சோ கதாபாத்திரம் செய்யும் முட்டாள்தனத்தை எல்லாம், அறிவுபூர்வமான செயல்கள் என, மக்கள் நம்பி, அவரை பிரதமராக தேர்ந்தெடுக்கின்றனர். பதவி வந்ததும், சோ நடத்தும், அரசியல் பகடி தான் படம் முழுவதும். 'அரசியல் டயலாக்' இருந்தாலே, படம் வெளிவர, இன்று, எத்தனை இடையூறுகள் வருகின்றன என்றால், அன்றைக்கு கேட்கவே வேண்டாம். அரசியல்வாதிகளின் நிர்ப்பந்தம் அல்லது மிரட்டல் காரணமாக, நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என, பலர் படப்பிடிப்பில் இருந்து, பாதியிலேயே ஓட்டம் பிடித்தனர். சோ என்ற ஒன்றை ஆளுமை, படத்தை துாணாக தாங்கி நின்றது.

தமிழ் சினிமாவில், முழுமையான அரசியல் படங்கள் என்றால், அதன் எண்ணிக்கையை, கை விரல்களுக்குள் அடக்கிவிடலாம். தமிழ் திரையுலகின், முதல், முழுமையான அரசியல் படம், முகமது பின் துக்ளக். முட்டாள்தனமான, மோசடியான அரசியல்வாதிகளை தோலுரித்து காட்ட, 'தில்' வேண்டும்; அது, சோவிடம் இருந்தது. தேர்தலில் ஓட்டு போடும் முன் தமிழக மக்கள், கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம், முகமது பின் துக்ளக்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா... சந்திரலேகாமறக்க முடியுமா... சந்திரலேகா மறக்க முடியுமா... பராசக்தி மறக்க முடியுமா... பராசக்தி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in