Advertisement

வெள்ளித்திரையில் வெற்றி நாயகி

பயோகிராபி

jayalalitha biography

Advertisement

  • இயற்பெயர் - கோமளவள்ளி
  • சினிமா பெயர் - ஜெ ஜெயலலிதா
  • பிறப்பு - 24 பிப்ரவரி 1948
  • இறப்பு - 05 டிசம்பர் 2016
  • பிறந்த இடம் - மேலுகோட்டே - மைசூர்
  • படித்த பள்ளி- பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலைப்பள்ளி - பெங்களுரு, சர்ச் பார்க் கான்வென்ட் - சென்னை
  • சினிமா அனுபவம் - 1964 - 1980
  • கணவர் - திருமணமாகவில்லை
  • பெற்றோர் - ஜெயராம் - சந்தியா
  • உடன் பிறந்தவர்கள் - ஜெயக்குமார்
  • புனைப் பெயர் - அம்மா - புரட்சித் தலைவி

விருதுகள்

1972ல் தமிழக அரசால் "கலைமாமணி விருது" வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

சிறந்த நடிகைக்கான "ஃபிலிம் ஃபேர் விருது" "பட்டிக்காடா பட்டணமா" திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.

"சூரியகாந்தி" திரைப்படத்திற்காகவும் சிறந்த நடிகைக்கான "ஃபிலிம் ஃபேர் விருது" கிடைக்கப் பெற்றார்.

1991 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான "கவுரவ டாக்டர் பட்டம்" சென்னை பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டது.

1992 ஆம் ஆண்டு அறிவியலுக்கான "கவுரவ டாக்டர் பட்டம்" டாக்டர் எம் ஜி ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டது.

Advertisement

1993 ஆம் ஆண்டு "டாக்டர் ஆஃப் லெட்டர்ஸ்" என்ற "கவுரவ டாக்டர் பட்டம்" மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டது.

2003 ஆம் ஆண்டு அறிவியலுக்கான "கவுரவ டாக்டர் பட்டம்" தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டது.

2004 ஆம் ஆண்டு "உமன் பாலிடீசியன் ஆஃப் த டெக்கேட்" என்ற விருதினை ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் லண்டன் இவருக்கு வழங்கி கௌரவித்தது.

இது போன்று ஏராளமான விருதுகளுக்கு சொந்தக்காரர் ஜெ ஜெயலலிதா.

Advertisement

போட்டோ

ஜெ ஜெயலலிதா அவர்களின் போட்டோ தொகுப்புகள்

Advertisement

துளிகள்

ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள்

Left Quote ஜெ ஜெயலலிதா நடித்த முதல் திரைப்படம் "எபிஸில்" என்ற ஆங்கில திரைப்படமாகும். வெளியான ஆண்டு 1961. Right Quote

Left Quote நாயகியாக நடித்த முதல் தென்னிந்திய திரைப்படம் "சின்னடா கொம்பே" என்ற கன்னடப் படமாகும். இயக்குநர் பி ஆர் பந்துலு. படம் வெளியான ஆண்டு 1964. நாயகன் நடிகர் கல்யாண் குமார். Right Quote

Left Quote தமிழில் நாயகியாக அறிமுகமான திரைப்படம் "வெண்ணிற ஆடை". இயக்குநர் ஸ்ரீதர். படம் வெளியான ஆண்டு 1965. Right Quote

Left Quote "மனுஷலு மமதலு" என்ற தெலுக்கு படத்தின் மூலம் தெலுங்குத் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார். படம் வெளியான ஆண்டு 1966. Right Quote

Left Quote எம்.ஜி.ஆரோடு இவர் நாயகியாக இணைந்து நடித்த முதல் திரைப்படம் "ஆயிரத்தில் ஒருவன்" இயக்குநர் பி ஆர் பந்துலு. படம் வெளியான ஆண்டு 1965. Right Quote

Left Quote சிவாஜி கணேசனோடு இவர் நாயகியாக இணைந்து நடித்த முதல் திரைப்படம் "கலாட்டா கல்யாணம்". 1967 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தை இயக்கியவர் இயக்குநர் சி வி ராஜேந்திரன். Right Quote

Left Quote ஜெயலலிதாவின் 100வது திரைப்படம் "திருமாங்கல்யம்". 1974 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தை இயக்கியவர் ஒளிப்பதிவாளர் ஏ வின்சென்ட். நாயகன் முத்துராமன். Right Quote

Left Quote "அடிமைப்பெண்" திரைப்படத்தில் வரும் "அம்மா என்றால் அன்பு" என்ற பாடலை முதன் முதலாக தனது சொந்தக் குரலில் பின்னணிப் பாடியிருந்தார் ஜெ ஜெயலலிதா. பாடலுக்கு இசையமைத்தவர் கே வி மகாதேவன். படம் வெளியான ஆண்டு 1969. Right Quote

Left Quote இயக்குநர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் இவர் நடித்திருந்த ஒரே திரைப்படம் "மேஜர் சந்திரகாந்த்". Right Quote

Left Quote ஹிந்தியில் நாயகியாக அறிமுகமாகி நடித்த ஒரே திரைப்படம் "இஸ்ஸத்". நாயகன் தர்மேந்திரா. Right Quote

Left Quote இவர் நடித்த 142 படங்களில் 77 திரைப்படங்கள் 100 நாட்களை கடந்து ஓடியவை. 18 திரைப்படங்கள் வெள்ளி விழா கண்டிருக்கின்றன. Right Quote

Left Quote இவர் நாயகியாக நடித்து வெளிவந்த கடைசி தமழ் திரைப்படம் "நதியைத் தேடிவந்த கடல்". 1980 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தை அன்றைய அறிமுக இயக்குநரான பி லெனின் இயக்கியிருந்தார். நடிகர் சரத்பாபு நாயகனாக நடித்திருந்தார். மேலும் இளையராஜாவின் இசையில் ஜெ ஜெயலலிதா நடித்திருந்த ஒரே திரைப்படமும் இதுவே. Right Quote

Left Quote 1992 ஆம் ஆண்டு ஜெ ஜெயலலிதா தமிழக முதல்வராக பதவியேற்றபின் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இயக்குநர் விசு இயக்கிய "நீங்க நல்லா இருக்கணும்" என்ற திரைப்படத்தில் முதல்வராகவே திரையில் தோன்றி மகிழ்வித்தார். Right Quote

Left Quote 1982 ஆம் ஆண்டு அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினரானார். Right Quote

Left Quote 1983 ஆம் ஆண்டு ஜனவரியில் எம் ஜி ஆரால் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரானார். Right Quote

Left Quote 1984 - 1989 கால கட்டங்களில் ராஜ்ய சபா உறுப்பினராக பணியாற்றினார். Right Quote

Left Quote 1987 ஆம் ஆண்டு எம் ஜி ஆரின் மறைவிற்குப் பின் அதிமுக., கட்சி இரண்டாக பிரிந்தது. கட்சியின் சின்னமான "இரட்டை இலை" தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது. Right Quote

Left Quote 1989 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு, எம் எல் ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜெயலலிதா. Right Quote

Left Quote முதல் பெண் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் என்ற பெருமை பெற்றவர் ஜெ ஜெயலலிதா. Right Quote

Left Quote 1989 ஆம் ஆண்டு, இரு அணியாக பிரிந்திருந்த அ தி மு க, ஒரு அணியாக இணைந்து, கட்சியின் பொதுச் செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜெ ஜெயலலிதா. Right Quote

Left Quote கட்சியின் சின்னமான "இரட்டை இலை", மீண்டும் 1989 ஆம் ஆண்டு கிடைக்கப் பெற்றது. Right Quote

Left Quote 1991 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாவின் தலைமையில் அ தி மு க கூட்டணி, மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 225 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற்றது. காங்கேயம், பர்கூர் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார் ஜெயலலிதா. Right Quote

Left Quote 1991 ஆம் ஆண்டு ஜுன் 24 அன்று முதல் முறையாக தமிழக முதல்வரானார். சிறிய வயது முதல்வர் என்ற பெருமையோடு, இரண்டாவது பெண் முதல்வர் என்ற பெருமைக்கும் உரியவரானார். Right Quote

Left Quote ஐந்து முறை தமிழக முதல்வராக பதவி வகித்தவர் என்ற பெருமைக்கு உரியவர் ஜெயலலிதா. Right Quote

Advertisement

வரலாறு

jayalalitha history

Advertisement

ஜெயலலிதா இரண்டு வயது குழந்தையாக இருந்தபோதே, வழக்கறிஞராக பணிபுரிந்து வந்த தனது தந்தையை இழக்க நேரிட்டது. பின்பு தனது தாய் வேதவதி என்ற இயற்பெயரைக் கொண்ட அன்றைய திரை நட்சத்திரமான சந்தியாவுடன் பெங்களுருவில் தனது சகோதரர் ஜெயராமுடன் வசிக்க வேண்டியதாயிருந்தது.

 

பள்ளிப் பருவத்தில் சிறந்த மாணவியான இவருக்கு இந்திய அரசாங்கத்தால் அளிக்கப்பட்ட உதவித்தொகை கிடைக்கப் பெற்றார். நாட்டிய நட்சத்திரமாக்க வேண்டும் என்ற இவரது அம்மாவின் ஆசைக்கிணங்க சிறு வயதிலேயே பரதம், கதக் என நாட்டியப் பயிற்சியுடன் சங்கீதமும் கற்றுவந்தார். கே ஜே சரஸா என்பவரிடம் பரதநாட்டியப் பயிற்சியை மேற்கொண்டார். 1960 ஆம் ஆண்டு நடன அரங்கேற்றம் நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சிறுமி ஜெயலலிதாவின் நடனத்தைக் கண்டு, சந்தியாவின் மகள் தங்கச் சிலைபோல் இருக்கிறாள். எதிர்காலத்தில் மிகச் சிறந்த கதாநாயகியாக வருவாள் என்றார். அதற்கு ஆரூடம் சொல்வதுபோல் சர்ச் பார்க் கான்வென்டில் படித்துக் கொண்டிருந்த போதே ஆங்கில நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

 

ஆங்கிலத்தை சரளமாகவும், தெளிவாகவும் பேசத் தெரிந்த இவருக்கு அந்த நாடகத்தில் ஆங்கிலம் சரியாக பேச வராத ஃப்ரெஞ்ச் பெண் வேடம். பின்னர் 1961 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி வி வி கிரியின் புதல்வர் சங்கர் கிரி எடுத்திருந்த "எபிஸில்" என்ற ஆங்கில படத்தின் வாயிலாக திரையிலும் முதன் முதலாக தனது நடிப்பை வெளிக்காட்டினார்.

 

"கர்ணன்" படத்தின் நூறாவது நாள் விழாவிற்கு தனது தாயோடு சென்ற செல்வி ஜெயலலிதாவைப் பார்த்த இயக்குநர் பி ஆர் பந்துலு, சினிமாவில் நடிக்கிறாயா என்று கேட்டதோடு மட்டுமின்றி ஸ்கிரீன் டெஸ்ட், மேக்கப் டெஸ்ட் என்று ஏதுமின்றி நேராக கேமிராவின் முன் நிறுத்தி நடிகை ஆக்கினார். படம் "சின்னடா கொம்பே" என்ற கன்னட திரைப்படம். இதுவே செல்வி ஜெயலலிதா நாயகியாக நடித்த முதல் தென்னிந்திய திரைப்படமாகும். இத்திரைப்படத்தை பார்த்த இயக்குநர் ஸ்ரீதர், பி ஆர் பந்துலுவின் மூலம், தான் எடுக்க விருந்த "வெண்ணிற ஆடை" திரைப்படத்தில் கதாநாயகியாக செல்வி ஜெயலலிதாவை தமிழுக்கு அறிமுகப்படுத்தினார்.

 

முதல் படத்திலேயே சவால் விடும் அளவிற்கு கனமான கதாபாத்திரம். தனது அற்புத நடிப்பாற்றலால் அந்த கதாபாத்திரத்திற்கு மேலும் அழகு சேர்த்திருந்தார் ஜெயலலிதா. மீண்டும் பி ஆர் பந்துலு, தனது சொந்த தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் ஜெயலலிதாவை நாயகி ஆக்கினார். படம் "ஆயிரத்தில் ஒருவன்". எம் ஜி ஆருக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்திருந்த முதல் திரைப்படமும் இதுவே. படம் மிகப் பெரிய வெற்றியை அடைந்தது. இதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என பிஸியான நடிகையாக வலம் வரத் தொடங்கினார் செல்வி ஜெயலலிதா.

 

நடிப்பு, நாட்டியம் என இந்த இரண்டு பரிமாணங்களையும் திரையில் மிளிரச் செய்த ஜெயலலிதாவிற்கு, நல்ல சங்கீத ஞானமும், பின்னணி பாடும் அளவிற்கு திறமையும் உண்டு என்பது , அன்று பலர் அறியாத ஒன்று. இதை சரியாக குறிப்பறிந்த எம் ஜி ஆர், தான் சொந்தமாக தயாரித்து நடித்திருந்த "அடிமைப்பெண்" திரைப்படத்தின் வாயிலாக இவரை பின்னணிப் பாடகியாகவும் உருவாக்கினார். பாடல் அம்மா என்றால் அன்பு. இதுவே இவர் பின்னணி பாடிய முதல் திரைப்பட பாடலாகும். தொடர்ச்சியாக "ஓ… மேரி தில்ரூபா" என்று சூரியகாந்தி திரைப்படத்தில் டி எம் சௌந்தர்ராஜனுடனும், "சித்திர மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டி வைத்தேன்" எனறு ஆரம்பமாகும் அன்பைத்தேடி திரைப்பட பாடலையும் டி எம் சௌந்தர்ராஜனுடன் ஜெயலலிதாவை பாட வைத்திருந்தார் இசையமைப்பாளர் எம் எஸ் விஸ்வநானதன். இசையமைப்பாளர் டி ஆர் பாப்பா இசையமைப்பில் "இரு மாங்கனி போல் இதழோரம்" என்ற பாடலை "வைரம்" திரைப்படத்திற்காக பின்னணிப் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்துடன் பாடியிருப்பார் ஜெயலலிதா. இதுபோன்று பல வெற்றிப் பாடல்கள் 70களில் இவரது குரலில் ஓங்கி ஒலித்தது.

 

தமிழில் எம் ஜி ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன் என அனைத்து முன்னணி நாயகர்களுடனும், தெலுங்கில் என் டி ராமாராவ், ஏ நாகேஸ்வரராவ், சோபன் பாபு என தெலுங்கு முன்னணி நாயகர்களுடனும், கன்னடத்தில் ராஜ்குமார், கல்யாண் குமார் என்று அனைத்து ஜாம்பவான் நடிகர்களுடனும் ஜோடியாக நடித்த இவர், ஹிந்தியில் தர்மேந்திராவுடன் மட்டும் ஜோடியாக நடித்திருக்கின்றார். ஏறக்குறைய அனைத்து மொழிகளிலும் 125க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் கடைசியாக நடித்திருந்த தமிழ் திரைப்படம் நதியைத் தேடிவந்த கடல். இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையமைப்பில் இவர் நடித்திருந்த ஒரே படமும் இதுவே.

 

இதற்க்குப் பின்னர் அரசியலில் தடம் பதித்த இவர் பல சோதனைகளைக் கடந்து சாதனைச் செல்வியாக, தைரிய லக்ஷ்மியாக வலம் வந்து வெற்றி வாகை சூடி, 5 முறை முதல்வர் பதவியில் இருந்து நல்லாட்சி புரிந்தார். 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி உடல்நலம் பாதிப்புக்குள்ளாகி சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 75 நாட்கள் தொடர் சிகிச்சைக்குப் பின் உடல்நலம் மோசமாகி, டிசம்பர் 5 ஆம் நாள் இரவு 11.30 மணியளவில் இயற்கை எய்தினார். டிசம்பர் 6 ஆம் நாள் மாலை எம் ஜி ஆர் சமாதிக்கு அருகிலேயே இவரது பூத உடலும் அடக்கம் செய்யப்பட்டது.

 



பாடல்கள்

ஜெயலலிதா நடிப்பில் வந்த பாடல்கள்

S.No. பாடல் படம் பாடகர் இசைஅமைப்பாளர்
1 கண்ணன் என்னும் மன்னன் பேரை வெண்ணிற ஆடை பி சுசிலா விஸ்வநாதன் ராமமூர்த்தி
2 அம்மம்மா காற்று வந்து ஆடை வெண்ணிற ஆடை பி சுசிலா விஸ்வநாதன் ராமமூர்த்தி
3 என்ன என்ன வார்த்தைகளோ வெண்ணிற ஆடை பி சுசிலா விஸ்வநாதன் ராமமூர்த்தி
4 உன்னை நான் சந்தித்தேன் ஆயிரத்தில் ஒருவன் பி சுசிலா விஸ்வநாதன் ராமமூர்த்தி
5 பருவம் எனது பாடல் ஆயிரத்தில் ஒருவன் பி சுசிலா விஸ்வநாதன் ராமமூர்த்தி
6 ஆடாமல் ஆடுகிறேன் ஆயிரத்தில் ஒருவன் பி சுசிலா விஸ்வநாதன் ராமமூர்த்தி
7 பொன்மேனி தழுவாமல் யார் நீ? பி சுசிலா வேதா
8 நானே வருவேன் யார் நீ? பி சுசிலா வேதா
9 என் வேதனையில் யார் நீ? பி சுசிலா வேதா
10 வருஷத்த பாரு அறுபத்தி ஆறு குமரிப்பெண் எல் ஆர் ஈஸ்வரி எம் எஸ் விஸ்வநாதன்
11 யாரோ ஆடத் தெரிந்தவர் யாரோ குமரிப்பெண் எல் ஆர் ஈஸ்வரி எம் எஸ் விஸ்வநாதன்
12 கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம் சந்திரோதயம் பி சுசிலா எம் எஸ் விஸ்வநாதன்
13 வெள்ளிக் கிழமை விடியும் வேலை நீ பி சுசிலா எம் எஸ் விஸ்வநாதன்
14 அடடா என்ன அழகு நீ எல் ஆர் ஈஸ்வரி எம் எஸ் விஸ்வநாதன்
15 எனக்கு வந்த இந்த மயக்கம் நீ எல் ஆர் ஈஸ்வரி எம் எஸ் விஸ்வநாதன்
16 எதிர்பாராமல் நடந்ததென்ன தனிப்பிறவி பி சுசிலா கே வி மகாதேவன்
17 ஒரு நாள் யாரோ மேஜர் சந்திரகாந்த் பி சுசிலா வி குமார்
18 வந்தால் என்னோடு இங்கே நான் எல் ஆர் ஈஸ்வரி டி கே ராமமூர்த்தி
19 என்னைப் பாடவைத்தவன் ஒருவன் அரசகட்டளை பி சுசிலா கே வி மகாதேவன்
20 கட்டழகு தங்கமகள் திருநாளோ காவல்காரன் பி சுசிலா எம் எஸ் விஸ்வநாதன்
21 அத்தைக்கு மீசை வச்சு பாருங்கடி எங்க ஊர் ராஜா எல் ஆர் ஈஸ்வரி எம் எஸ் விஸ்வநாதன்
22 நெத்தியிலே பொட்டு வச்சு புதிய பூமி பி சுசிலா எம் எஸ் விஸ்வநாதன்
23 மயக்கத்தை தந்தவன் யாரடி பொம்மலாட்டம் பி சுசிலா வி குமார்
24 நான் கண்ட கனவினில் நீ இருந்தாய் ஒளிவிளக்கு எல் ஆர் ஈஸ்வரி எம் எஸ் விஸ்வநாதன்
25 சந்தனம் குங்குமம் கொண்ட தாமரைப் பூ ரகசிய போலீஸ் 115 பி சுசிலா எம் எஸ் விஸ்வநாதன்
26 ஆடை முழுதும் நனைய நனைய மழை நம் நாடு பி சுசிலா எம் எஸ் விஸ்வநாதன்
27 நான் ஏழு வயசில நம் நாடு எல் ஆர் ஈஸ்வரி எம் எஸ் விஸ்வநாதன்
28 கூட்டத்திலே யார்தான் கொடுத்து தெய்வமகன் பி சுசிலா எம் எஸ் விஸ்வநாதன்
29 அம்மா என்றால் அன்பு அடிமைப்பெண் ஜெயலலிதா கே வி மகாதேவன்
30 ஒரு ஆலயம் ஆகும் மங்கை மனது சுமதி என் சுந்தரி பி சுசிலா எம் எஸ் விஸ்வநாதன்
31 ஓ...ராயிரம் நாடகம் சுமதி என் சுந்தரி பி சுசிலா எம் எஸ் விஸ்வநாதன்
32 கல்யாண சந்தையிலே சுமதி என் சுந்தரி பி சுசிலா எம் எஸ் விஸ்வநாதன்
33 சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு சவாலே சமாளி பி சுசிலா எம் எஸ் விஸ்வநாதன்
34 16 வயதினிலே 17 பிள்ளையம்மா அன்னமிட்ட கை பி சுசிலா கே வி மகாதேவன்
35 முத்துச் சோலை தங்கக் கிளிக்ள் பட்டிக்காடா பட்டணமா பி சுசிலா எம் எஸ் விஸ்வநாதன்
36 கங்கையிலே ஓடம் இல்லையோ ராஜா பி சுசிலா எம் எஸ் விஸ்வநாதன்
37 எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது அவன்தான் மனிதன் வாணிஜெயராம் எம் எஸ் விஸ்வநாதன்
38 நாணமோ இன்னும் நாணமோ ஆயிரத்தில் ஒருவன் டி எம் சௌந்தர்ராஜன்-பி சுசிலா விஸ்வநாதன் ராமமூர்த்தி
39 என்றும் பதினாறு கன்னித்தாய் டி எம் சௌந்தர்ராஜன்-பி சுசிலா கே வி மகாதேவன்
40 காத்திருந்த கண்களே மோட்டார் சுந்தரம்பிள்ளை பி பி ஸ்ரீநிவாஸ்-பி சுசிலா எம் எஸ் விஸ்வநாதன்
41 எனக்கும் உனக்கும் தான் பொருத்தம் முகராசி டி எம் சௌந்தர்ராஜன்-பி சுசிலா கே வி மகாதேவன்
42 சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ சந்திரோதயம் டி எம் சௌந்தர்ராஜன்-பி சுசிலா எம் எஸ் விஸ்வநாதன்
43 எங்கிருந்தோ ஆசைகள் சந்திரோதயம் டி எம் சௌந்தர்ராஜன்-பி சுசிலா எம் எஸ் விஸ்வநாதன்
44 கன்னத்தில் என்னடி காயம் தனிப்பிறவி டி எம் சௌந்தர்ராஜன்-பி சுசிலா கே வி மகாதேவன்
45 ஒரே முறைதான் உன்னோடு தனிப்பிறவி டி எம் சௌந்தர்ராஜன்-பி சுசிலா கே வி மகாதேவன்
46 நேரம் நல்ல நேரம் தனிப்பிறவி டி எம் சௌந்தர்ராஜன்-பி சுசிலா கே வி மகாதேவன்
47 பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு தாய்க்குத் தலைமகன் டி எம் சௌந்தர்ராஜன்-பி சுசிலா கே வி மகாதேவன்
48 போதுமோ இந்த இடம் நான் டி எம் சௌந்தர்ராஜன்-பி சுசிலா டி கே ராமமூர்த்தி
49 நினைத்தேன் வந்தாய் நூறு வயது காவல்காரன் டி எம் சௌந்தர்ராஜன்-பி சுசிலா எம் எஸ் விஸ்வநாதன்
Advertisement
50 மெல்லப் போ மெல்லப் போ காவல்காரன் டி எம் சௌந்தர்ராஜன்-பி சுசிலா எம் எஸ் விஸ்வநாதன்
51 பரமேஸ்வரி ராஜேஸ்வரி ஜகதீஷ்வரி எங்க ஊர் ராஜா டி எம் சௌந்தர்ராஜன்-பி சுசிலா எம் எஸ் விஸ்வநாதன்
52 விழியே விழியே உனக்கென்ன வேலை புதிய பூமி டி எம் சௌந்தர்ராஜன்-பி சுசிலா எம் எஸ் விஸ்வநாதன்
53 சின்னவளை முகம் சிவந்தவளை புதிய பூமி டி எம் சௌந்தர்ராஜன்-பி சுசிலா எம் எஸ் விஸ்வநாதன்
54 நீயே தான் எனக்கு மணவாட்டி குடியிருந்த கோயில் டி எம் சௌந்தர்ராஜன்-பி சுசிலா எம் எஸ் விஸ்வநாதன்
55 குங்குமப் பொட்டின் மங்கலம் குடியிருந்த கோயில் டி எம் சௌந்தர்ராஜன்-பி சுசிலா எம் எஸ் விஸ்வநாதன்
56 மயங்கும் வயது கணவன் டி எம் சௌந்தர்ராஜன்-பி சுசிலா எம் எஸ் விஸ்வநாதன்
57 மெல்ல வரும் காற்று கலாட்டா கல்யாணம் டி எம் சௌந்தர்ராஜன்-பி சுசிலா எம் எஸ் விஸ்வநாதன்
58 நல்ல இடம் நீ வந்த இடம் கலாட்டா கல்யாணம் டி எம் சௌந்தர்ராஜன்-பி சுசிலா எம் எஸ் விஸ்வநாதன்
59 நல்ல நாள் பார்க்கவோ பொம்மலாட்டம் டி எம் சௌந்தர்ராஜன்-பி சுசிலா வி குமார்
60 மின்மினியை கண்மணியாய் கொண்டவனை கண்ணன் என் காதலன் டி எம் சௌந்தர்ராஜன்-எல் ஆர் ஈஸ்வரி எம் எஸ் விஸ்வநாதன்
61 சிரித்தாள் தங்கப் பதுமை கண்ணன் என் காதலன் டி எம் சௌந்தர்ராஜன்-பி சுசிலா எம் எஸ் விஸ்வநாதன்
62 ருக்குமணியே பரபரபர ஒளிவிளக்கு டி எம் சௌந்தர்ராஜன்-எல் ஆர் ஈஸ்வரி எம் எஸ் விஸ்வநாதன்
63 நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஒளிவிளக்கு டி எம் சௌந்தர்ராஜன்-பி சுசிலா எம் எஸ் விஸ்வநாதன்
64 பால் தமிழ் பால் ரகசிய போலீஸ் 115 டி எம் சௌந்தர்ராஜன்-எல் ஆர் ஈஸ்வரி எம் எஸ் விஸ்வநாதன்
65 என்னப் பொருத்தம் நமக்குள் ரகசிய போலீஸ் 115 டி எம் சௌந்தர்ராஜன்-பி சுசிலா எம் எஸ் விஸ்வநாதன்
66 கண்ணே கனியே முத்தே ரகசிய போலீஸ் 115 டி எம் சௌந்தர்ராஜன்-பி சுசிலா எம் எஸ் விஸ்வநாதன்
67 நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நம் நாடு டி எம் சௌந்தர்ராஜன்-எல் ஆர் ஈஸ்வரி எம் எஸ் விஸ்வநாதன்
68 காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள் தெய்வமகன் டி எம் சௌந்தர்ராஜன்-பி சுசிலா எம் எஸ் விஸ்வநாதன்
69 ஆயிரம் நிலவே வா அடிமைப்பெண் எஸ் பி பாலசுப்ரமணியம்-பி சுசிலா கே வி மகாதேவன்
70 காலத்தை வென்றவன் நீ அடிமைப்பெண் பி சுசிலா-எஸ் ஜானகி கே வி மகாதேவன்
71 தொட்டுக் கொள்ளவா மாட்டுக்கார வேலன் டி எம் சௌந்தர்ராஜன்-பி சுசிலா கே வி மகாதேவன்
72 மாணிக்கத் தேரில் மரகத கலசம் தேடிவந்த மாப்பிள்ளை டி எம் சௌந்தர்ராஜன்-பி சுசிலா எம் எஸ் விஸ்வநாதன்
73 இடமோ சுகமானது தேடிவந்த மாப்பிள்ளை டி எம் சௌந்தர்ராஜன்-பி சுசிலா எம் எஸ் விஸ்வநாதன்
74 தங்கப் பதக்கத்தின் மேலே எங்கள் தங்கம் டி எம் சௌந்தர்ராஜன்-பி சுசிலா எம் எஸ் விஸ்வநாதன்
75 நான் அளவோடு ரசிப்பவன் எங்கள் தங்கம் டி எம் சௌந்தர்ராஜன்-பி சுசிலா எம் எஸ் விஸ்வநாதன்
76 சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே எங்கிருந்தோ வந்தாள் டி எம் சௌந்தர்ராஜன்-பி சுசிலா எம் எஸ் விஸ்வநாதன்
77 நீலநிறம் வானுக்கும் கடலுக்கும் என் அண்ணன் டி எம் சௌந்தர்ராஜன்-எஸ் ஜானகி கே வி மகாதேவன்
78 பொட்டு வைத்த முகமோ சுமதி என் சுந்தரி எஸ் பி பாலசுப்ரமணியம்-பி வசந்தா எம் எஸ் விஸ்வநாதன்
79 ஒருதரம் ஒரே தரம் சுமதி என் சுந்தரி டி எம் சௌந்தர்ராஜன்-பி சுசிலா எம் எஸ் விஸ்வநாதன்
80 நாம் ஒருவரை ஒருவர் குமரிக்கோட்டம் டி எம் சௌந்தர்ராஜன்-எல் ஆர் ஈஸ்வரி எம் எஸ் விஸ்வநாதன்
81 கண்ணன் எந்தன் காதலன் ஒரு தாய் மக்கள் டி எம சௌந்தர்ராஜன்-பி சுசிலா எம் எஸ் விஸ்வநாதன்
82 அழகுக்கு மறுபெயர் பெண்ணா அன்னமிட்ட கை டி எம் சௌந்தர்ராஜன்-எஸ் ஜானகி கே வி மகாதேவன்
83 ஒன்னொன்னா ஒன்னொன்னா சொல்லு சொல்லு அன்னமிட்ட கை டி எம் சௌந்தர்ராஜன்-பி சுசிலா கே வி மகாதேவன்
84 கேட்டுக்கோடி உருமி மேளம் பட்டிக்காடா பட்டணமா டி எம் சௌந்தர்ராஜன்-எல் ஆர் ஈஸ்வரி எம் எஸ் விஸ்வநாதன்
85 நீ வரவேண்டும் என்று ராஜா டி எம் சௌந்தர்ராஜன்-பி சுசிலா எம் எஸ் விஸ்வநாதன்
86 பள்ளி அறைக்குள் வந்த தர்மம் எங்கே டி எம் சௌந்தர்ராஜன்-பி சுசிலா எம் எஸ் விஸ்வநாதன்
87 என் உள்ளம் உந்தன் ஆராதனை ராமன் தேடிய சீதை டி எம் சௌந்தர்ராஜன்-எல்; ஆர் ஈஸ்வரி எம் எஸ் விஸ்வநாதன்
88 நல்லதுக் கண்ணே கனவு கனிந்தது ராமன் தேடிய சீதை டி எம் சௌந்தர்ராஜன்-பி சுசிலா எம் எஸ் விஸ்வநாதன்
89 திருவளர் செல்வியோ ராமன் தேடிய சீதை டி எம் சௌந்தர்ராஜன்-பி வசந்தா எம் எஸ் விஸ்வநாதன்
90 கேட்டதெல்லாம் நான் தருவேன் திக்குத் தெரியாத காட்டில் எஸ் பி பாலசுப்ரமணியம்-பி சுசிலா எம் எஸ் விஸ்வநாதன்
91 நான் என்றால் அது அவளும் சூரியகாந்தி எஸ் பி பாலசுப்ரமணியம்-ஜெயலலிதா எம் எஸ் விஸ்வநாதன்
92 ஓ... மேரி தில்ரூபா சூரியகாந்தி டி எம் சௌந்தர்ராஜன்-ஜெயலலிதா எம் எஸ் விஸ்வநாதன்
93 சித்திர மண்டபத்தில் சில முத்துக்கள் அன்பைத்தேடி டி எம் சௌந்தர்ராஜன்-ஜெயலலிதா எம் எஸ் விஸ்வநாதன்
94 இரு மாங்கனி போல் இதழோரம் வைரம் எஸ் பி பாலசுப்ரமணியம்-ஜெயலலிதா டி ஆர் பாப்பா
95 பொன்னான மனம் எங்கு திருமாங்கல்யம் எஸ் பி பாலசுப்ரமணியம்-பி சுசிலா எம் எஸ் விஸ்வநாதன்
96 சிவகாமி ஆட வந்தால் பாட்டும் பரதமும் டி எம் சௌந்தர்ராஜன்-பி சுசிலா எம் எஸ் விஸ்வநாதன்
97 மாந்தோரண வீதியில் பாட்டும் பரதமும் டி எம் சௌந்தர்ராஜன்-பி சுசிலா எம் எஸ் விஸ்வநாதன்
98 தவிக்குது தயங்குது ஒரு மனது நதியைத் தேடிவந்த கடல் பி ஜெயச்சந்திரன்-எஸ் பி ஷைலஜா இளையராஜா

திரைப்படங்கள்

ஜெயலலிதா நடிப்பில் உருவான திரைப்படங்கள்

S.No. படம் இயக்குனர்
1 வெண்ணிற ஆடை சி வி ஸ்ரீதர்
2 ஆயிரத்தில் ஒருவன் பி ஆர் பந்துலு
3 கன்னித்தாய் எம் ஏ திருமுகம்
4 மோட்டார் சுந்தரம் பிள்ளை எஸ் எஸ் பாலன்
5 முகராசி எம் ஏ திருமுகம்
6 யார் நீ? சத்யம்
7 குமரிப்பெண் டி ஆர் ராமண்ணா
8 சந்திரரோதயம் கே சங்கர்
9 நீ டி ஆர் ராமண்ணா
10 தனிப்பிறவி எம் ஏ திருமுகம்
11 கௌரிக் கல்யாணம் கே சங்கர்
12 மேஜர் சந்திரகாந்த் கே பாலசந்தர்
13 மணிமகுடம் எஸ் எஸ் ராஜேந்திரன்
14 தாய்க்குத் தலைமகன் எம் ஏ திருமுகம்
15 நான் டி ஆர் ராமண்ணா
16 மாடி வீட்டு மாப்பிள்ளை எஸ் கே ஏ சாரி
17 அரசகட்டளை எம் ஜி சக்கரபாணி
18 காவல்காரன் ப நீலகண்டன்
19 கந்தன் கருணை ஏ பி நாகராஜன்
Advertisement
20 ராஜா வீட்டுப் பிள்ளை தாதா மிராஸி
21 பணக்காரப் பிள்ளை ஜம்பு
22 கலாட்டா கல்யாணம் சி வி ராஜேந்திரன்
23 தேர்த்திருவிழா எம் ஏ திருமுகம்
24 எங்க ஊர் ராஜா பி மாதவன்
25 புதிய பூமி சாணக்யா
26 குடியிருந்த கோயில் கே சங்கர்
27 மூன்றெழுத்து டி ஆர் ராமண்ணா
28 முத்துச்சிப்பி எம் கிருஷ்ணன்
29 காதல் வாகனம் எம் ஏ திருமுகம்
30 கணவன் ப நீலகண்டன்
31 பொம்மலாட்டம் முக்தா வி சீனிவாசன்
32 கண்ணன் என் காதலன் ப நீலகண்டன்
33 ஒளி விளக்கு சாணக்யா
34 ரகசிய போலீஸ் 115 பி ஆர் பந்துலு
35 அன்று கண்ட முகம் ஜி ராமகிருஷ்ணன்
36 நம் நாடு ஜம்பு
37 தெய்வமகன் ஏ சி திருலோகசந்தர்
38 குருதட்சணை ஏ பி நாகராஜன்
39 அடிமைப்பெண் கே சங்கர்
40 அனாதை ஆனந்தன் கிருஷ்ணன்
41 மாட்டுக்கார வேலன் ப நீலகண்டன்
42 தேடிவந்த மாப்பிள்ளை பி ஆர் பந்துலு
43 எங்க மாமா ஏ சி திருலோகசந்தர்
44 எங்கள் தங்கம் கிருஷ்ணன்
45 எங்கிருந்தோ வந்தாள் ஏ சி திருலோகசந்தர்
46 என் அண்ணன் ப நீலகண்டன்
47 பாதுகாப்பு ஏ பீம்சிங்
48 சுமதி என் சுந்தரி சி வி ராஜேந்திரன்
49 ஆதிபராசக்தி கே எஸ் கோபாலகிருஷ்ணன்
50 அன்னை வேளாங்கன்னி கே தங்கப்பன்
51 சவாலே சமாளி மல்லியம் ராஜகோபால்
52 தங்க கோபுரம் எம் எஸ் சோலைமலை
53 குமரிக்கோட்டம் ப நீலகண்டன்
54 ஒரு தாய் மக்கள் ப நீலகண்டன்
55 நீரும் நெருப்பும் ப நீலகண்டன்
56 அன்னமிட்டகை எம் கிருஷ்ணன்
57 பட்டிக்காடா பட்டணமா பி மாதவன்
58 ராஜா சி வி ராஜேந்திரன்
59 தர்மம் எங்கே ஏ சி திருலோகசந்தர்
Advertisement
60 ராமன் தேடிய சீதை ப நீலகண்டன்
61 நீதி சி வி ராஜேந்திரன்
62 திக்குத் தெரியாத காட்டில் என் சி சக்கரவர்த்தி
63 சக்திலீலை டி ஆர் ராமண்ணா
64 பாக்தாத் பேரழகி டி ஆர் ராமண்ணா
65 பட்டிக்காட்டுப் பொன்னையா பி எஸ் ரங்கா
66 வந்தாளே மகராசி கே எஸ் கோபாலகிருஷ்ணன்
67 கங்கா கௌரி பி ஆர் பந்துலு
68 சூரியகாந்தி முக்தா வி சீனிவாசன்
69 அன்பைத்தேடி முக்தா வி சீனிவாசன்
70 அன்பு தங்கை எஸ் பி முத்துராமன்
71 தாய் டி யோகானந்த்
72 வைரம் டி ஆர் ராமண்ணா
73 திருமாங்கல்யம் ஏ வின்சென்ட்
74 அவளுக்கு ஆயிரம் கண்கள் டி ஆர் ராமண்ணா
75 யாருக்கும் வெட்கமில்லை சோ
76 அவன்தான் மனிதன் ஏ சி திருலோகசந்தர்
77 பாட்டும் பரதமும் பி மாதவன்
78 கணவன் மனைவி ஏ பீம்சிங்
79 சித்ரா பௌர்ணமி பி மாதவன்
80 ஸ்ரீகிருஷ்ணலீலா ஏ பி நாகராஜன்
81 உன்னை சுற்றும் உலகம் ஜி சுப்ரமணிய ரெட்டியார்
82 நதியைத் தேடிவந்த கடல் பி லெனின்