ஜாங்கோ - தங்க நாணய போட்டி | Jango Tamil Movie Contest

Advertisement

'ஜாங்கோ' தங்க நாணய போட்டி

அட்டகத்தி, பீட்சா, இன்று நேற்று நாளை, மாயவன் போன்ற வித்தியாசமான படங்களை தயாரிக்கும் சி.வி.குமார், ஜென் ஸ்டுடியோஸ் சுரேந்திரன் ரவி உடன் இணைந்து தனது திருக்குமரன் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் சார்பாக தயாரித்துள்ள மற்றுமொரு படம் தான் 'ஜாங்கோ'. தமிழ் சினிமாவின் முதல் டைம் லூப் கதை என்ற பெருமையுடன் இந்த படம் நவ., 19ல் வெளியாகிறது. பொதுவாக தனது படங்களை வித்தியாசமான முறையில் புரொமோஷன் செய்வதோடு போட்டிகள் நடத்தி ரசிகர்களை வியப்படைய செய்யும் சி.வி.குமார், இந்த முறை ஜாங்கோ படத்திற்காகவும் சிறப்பு போட்டி ஒன்றை தினமலர் இணையதளம் மூலமாக நடத்துகிறார்.

போட்டியில் கேட்கப்படும் கேள்விக்கு சரியான பதிலளிக்கும் இருவருக்கு முதல் பரிசாக தலா ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கப்படும். ஐந்து பேருக்கு இரண்டாம் பரிசாக தலா ஒரு டைட்டன் கைக்கடிகாரம் வழங்கப்படும்.

போட்டிக்கான கடைசி நாள் : 18-11-2021

Jango Movie
போட்டியில் கலந்து கொண்ட வாசகர்கள் அனைவருக்கும் நன்றி

போட்டிக்கான விதிமுறைகள்...
  • 01. தமிழ்நாட்டில் உள்ளவர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க முடியும்.
  • 02. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் போட்டியில் பங்கேற்க கூடாது.
  • 03. வெற்றியாளர்கள் யார் என்பதை தேர்வுக்குழு எடுக்கும் முடிவே இறுதியானது.
  • 04. சிபாரிசு, பரிந்துரை, மற்றும் மறைமுக தகவல்களுக்கு அனுமதி இல்லை
  • 05. போட்டி துவங்கும் நாள் நவ., 15 முதல் நவ., 18 வரை. அதற்கு மேல் பங்கேற்க இயலாது.
  • 06. இந்த போட்டியில் தினமலர் பணியாளர்கள், முகவர்கள் பங்கேற்க இயலாது.
  • 07. முடிவுகள் தினமலர் இணையதளம் மற்றும் செய்தித்தாளில் இடம்பெறும்.