Advertisement

சிறப்புச்செய்திகள்

விவேக் மறைவு என்னை மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தியது - இளையராஜா | மரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்துவோம் - சிம்பு | பிக்பாஸ் வீட்டுக்கு ஒரு வாரம் லீவு போட்ட சுதீப் | ஆறு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மீரா ஜாஸ்மின் | சித்தார்த் பிறந்தநாளில் மகாசமுத்ரம் போஸ்டர் வெளியீடு | தமிழில் உருவாகும் மோசன் காமிக்ஸ் சூப்பர் ஹீரோ படம் | இறுதிக்கட்டத்தில் அதர்வா படம் | எம்.ஜி.ஆர் மகன்: தந்தை மகன் ஊடலை சொல்லும் படம்: பொன்ராம் | ஹிந்தி டிவி நடிகை பாருல் சவுத்ரி குடும்பம் கொரோனாவால் பாதிப்பு | விடைபெற்றார் விவேக் : அரசு மரியாதையுடன் உடல் தகனம் - மரக்கன்றுகள் ஏந்தி ரசிகர்கள் அஞ்சலி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

என்னை அவமானப்படுத்தாதீர்கள் ; சஞ்சய் தத் கோரிக்கை

31 டிச, 2020 - 11:00 IST
எழுத்தின் அளவு:
Dont-insult-me-says-Sanjay-dutt

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் கன்னடத்தில் வெளியாகி, தென்னிந்தியா மட்டுமல்லாமல் இந்தியிலும் வரவேற்பை பெற்ற படம் கேஜிஎப். யஷ் கதாநாயகனாக நடித்த இந்தப்படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருந்தார். இதன் வெற்றியை தொடர்ந்து தற்போது கேஜிஎப்-2 படம் தயாராகி வருகிறது. இதில் வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் யஷ் மற்றும் சஞ்சய் தத் இருவரும் மோதும் இரண்டு சண்டை காட்சிகளை படமாக்க திட்டமிட்டிருந்தாராம் இயக்குனர் பிரசாந்த் நீல். இதில் ஏற்கனவே ஒரு சண்டைக்காட்சியை படமாக்கி முடித்துவிட்டார்களாம்.

இந்த நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக இடையில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இன்னொரு பக்கம் சஞ்சய் தத் கேன்சர் நோய் பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார். தற்போது மீண்டும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில், சஞ்சய் தத், உடல்நிலையை கருத்தில் கொண்டு, அவரை சிரமப்படுத்தாத வகையில் ஆக்சன் காட்சிகளை மிக எளிதாக இருக்கும்படி மாற்ற சொன்னாராம்.

மீண்டும் படப்படிப்பில் கலந்துகொண்ட சஞ்சய் தத், இதை முதல்நாள் சண்டைக்காட்சியை படமாக்கும்போதே உணர்ந்துகொண்டாராம். உடனே இயக்குனரை அழைத்து, “என் உடல்நிலையை மனதில் கொண்டு, நான் ஆக்சன் காட்சிகளில் நடிக்க தகுதியில்லாதவன் என, சண்டை காட்சிகளின் வீரியத்தை குறைத்து என்னை அவமானப்படுத்தாதீர்கள். இதற்குமுன் அந்த காட்சிகள் எப்படி எழுதப்பட்டுள்ளதோ, அதேபோல் என்னால் நடிக்க முடியும். இதில் எந்த சமரசமும் செய்யமாட்டேன்.. ரசிகர்களை ஏமாற்றவும் மாட்டேன்” என கறாராக கூறிவிட்டாராம் சஞ்சய் தத்..

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தயாரிப்பாளராக மாறுகிறார் சோனு சூட்தயாரிப்பாளராக மாறுகிறார் சோனு சூட் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in