சேகர் படத்தின் தடை நீக்கம் ; மறு ரிலீஸ் தேதி பரிசீலனை | ரிட்டர்ன் டிக்கெட்டை காட்டினால் மட்டுமே ஜாமீன் ; நடிகருக்கு நீதிமன்றம் செக் | விசாரணை தடம் மாறுகிறது : பாதிக்கப்பட்ட நடிகை நீதிமன்றத்தில் மனு | 2022ல் ஹாட்ரிக் வெளியீட்டில் கார்த்தி | போர்கொண்ட சிங்கம் : 'விக்ரம்'-ன் அடுத்த பாடல் வெளியீடு | ‛தி கிரேமேன்' டிரைலர் தமிழிலும் வெளியானது - வில்லனாக தனுஷ் | சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் | 'தி கிரே மேன்' டிரைலர் - ஹாலிவுட் படத்தில் தமிழ் நடிகர் தனுஷின் பெயர் | கார்த்தியின் ‛சர்தார்' தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிப்பு | விக்ரம் - மும்முனைப் போட்டியை சமாளிப்பாரா கமல்ஹாசன்? |
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தை தொடர்ந்து, போலீஸ் விசாரணையில் பாலிவுட்டில் போதைப்பொருள் புழக்கம் இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.. இதை தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், நடிகர் சுஷாந்த்தின் காதலி ரியா சக்கரபோர்த்தி, பாலிவுட் முன்னணி நடிகைகளான தீபிகா படுகோனே, சாரா அலிகான், ஷ்ரதா கபூர் ஆகியோரிடம் போதைப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை விசாரணை நடத்தியது.
இந்தநிலையில் பாலிவுட் தயாரிப்பாளரும் இயக்குனருமான கரண் ஜோஹருக்கு, தற்போது போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். அதாவது 2019ல் கரண் ஜோஹர் நடத்திய பார்ட்டி ஒன்றின் சிறிய வீடியோ கிளிப் கடந்த சில மாதங்களுக்கு முன் இணையத்தில் பரவியது. அதில் கலந்து கொண்ட சிலரிடம் போதைப்பொருள் பயன்பாடு இருந்ததாக சொல்லப்பட்டது.
இந்தநிலையில் தான், அந்த பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டது குறித்த விபரங்கள், வீடியோ ஆதாரங்கள் ஆகியவற்றை தங்கள் வசம் ஒப்படைக்கும்படி கரண் ஜோஹருக்கு போதைப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.,. அதேசமயம், அவற்றை ஒப்படைப்பதற்காக கரண் ஜோஹர் நேரில் வர தேவையில்லை என்றும், வேறு ஒரு நபர் மூலமாக கொடுத்து அனுப்பலாம் என்றும் விலக்கு அளித்துள்ளது போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை.