அரசியல் ரசிகர்களுக்கு மே 2 : அஜித் ரசிகர்களுக்கு மே 1 | ஐதராபாத்தில் ரத்தாகும் படப்பிடிப்புகள் : 'அண்ணாத்த' நிலை என்ன ? | இன்று முதல் 3 காட்சிகள் மட்டுமே... | "மிஸ்டர் காப்ளர்" - சாதனை குறும்படத்திற்கு விருது வழங்கி கவுரவம் | கனியை வீட்டுக்கும் சென்று பாராட்டிய சிம்பு | பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு கார் பரிசளித்த சமந்தா | ஷங்கர் படத்தில் விஜய்சேதுபதி? | கொரோனாவிலிருந்து மீண்டு ரன்பீருடன் மாலத்தீவு பறந்த ஆலியா பட் | எம்.ஜி.ஆர்.மகன் ரிலீஸ் தள்ளி வைப்பு | படக் குழுவினருக்கு கொரோனா: கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு நிறுத்தம் |
பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட், முதன்முதலாக தெலுங்கில், ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆர்ஆர்ஆர்' என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். கொரோனா தாக்கத்திற்கு பிறகு, ஆலியா பட் இந்தப்படத்தில் நடிக்க வாய்ப்பே இல்லை என்பது போல அவரை சுற்றி சுழன்றடித்த சில பிரச்சனைகள் ஒரு தோற்றத்தை உருவாக்கின. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தற்போது ஐதராபாத்தில் இந்தப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் ஆலியா பட்.
இந்நிலையில் நடிகர் மகேஷ்பாபுவின் மகள் சிறுமி சித்தாராவை சந்தித்து ஆலியா பட் சிறிது நேரம் உரையாடி மகிழ்ந்திருக்கிறார். அப்போது சித்தாராவுக்கு தான் வாங்கி வந்த ஆடையை பரிசளித்துள்ளார் ஆலியா பட்.. அவருடன் பேசி மகிழ்ந்த தருணத்தை புகைப்படத்துடன் பதிவிட்டுள்ள மகேஷ்பாபுவின் மகள், “.என்னுடைய மனம் கவர்ந்த நடிகை எனக்கு அன்பளிப்பாக கொடுத்தது. இந்த அழகான ஆடையை எனக்கு கொடுத்து, எனது நாளை அழகாக மாற்றியதற்கு நன்றி.. என்னைப்போல எல்லா குழந்தைகளையும் மகிழ்விப்பீர்கள் என நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
மகேஷ்பாபுவையும் ஆலியா பட் சந்தித்து பேசினார் என சொல்லப்பட்டாலும் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.