அஜித் - ஷாலினியின் ரொமான்ட்டிக் போட்டோ வைரல் | 'மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட்' கோவை குணா காலமானார் | லண்டனில் ‛பொன்னியின் செல்வன் 2' பின்னணி இசை மும்முரம் | தியேட்டரில் டிக்கெட் விற்பனை செய்த நிவேதா பெத்துராஜ் | 'ஆர்ஆர்ஆர்' ஆஸ்கர் விருதுக்காக நான் செலவு செய்யவில்லை - தயாரிப்பாளர் டிவிவி தனய்யா | சிரஞ்சீவியின் சகோதரர் மகள், கணவருடன் கருத்து வேறுபாடு? | பெண் அரசியல்வாதி என்றால் சேலை தான் கட்ட வேண்டுமா? - மஞ்சு வாரியர் | பிறக்கும்போதே பெற்றோரை குழப்பி விட்டேன் ; ராணி முகர்ஜி கலாட்டா | 130 பேருக்கு 10 கிராம் தங்கம் கொடுத்த கீர்த்தி சுரேஷ் | ஏழைகளுக்கு இலவச இருதய சிகிச்சை அறிவித்த பாலகிருஷ்ணா |
ஹிந்தித் திரையுலகத்தின் முன்னணி வசூல் நடிகர்களில் ஒருவர் சல்மான் கான். தற்போது பிரபுதேவா இயக்கத்தில் ராதே படத்தில் நடித்து வருகிறார். இப்படத்துடன் கிக் 2 படத்திலும் கபி ஈத் கபி தீவாளி படத்திலும் நடிக்க உள்ளார். இன்ஸ்டாகிராமில் 36 மில்லியன் பாலோயர்களை வைத்துள்ள சல்மான்கான் அடிக்கடி அவருடைய ரசிகர்களுக்காக ஏதாவது பதிவுகளைப் போட்டு வருவார்.
சற்றுமுன் அவருடைய வழக்கமான ஸ்டைலான சட்டை இல்லாமல் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். இந்த வயதிலும் தன்னுடைய உடல் மீது அதிக அக்கறை உள்ளவர் சல்மான் கான். இடைவிடாத உடற்பயிற்சி செய்பவர். மற்ற ஹிந்தி நடிகர்களை விட தன் உடல் தோற்றத்தால் ரசிகர்களை வசீகரிக்கும் சல்மான் பதிவிட்டுள்ள புகைப்படத்திற்கு அதற்குள்ளாக 10 லட்சத்திற்கும் மேலான லைக்குகள் குவிந்துவிட்டன.