அஜித் - ஷாலினியின் ரொமான்ட்டிக் போட்டோ வைரல் | 'மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட்' கோவை குணா காலமானார் | லண்டனில் ‛பொன்னியின் செல்வன் 2' பின்னணி இசை மும்முரம் | தியேட்டரில் டிக்கெட் விற்பனை செய்த நிவேதா பெத்துராஜ் | 'ஆர்ஆர்ஆர்' ஆஸ்கர் விருதுக்காக நான் செலவு செய்யவில்லை - தயாரிப்பாளர் டிவிவி தனய்யா | சிரஞ்சீவியின் சகோதரர் மகள், கணவருடன் கருத்து வேறுபாடு? | பெண் அரசியல்வாதி என்றால் சேலை தான் கட்ட வேண்டுமா? - மஞ்சு வாரியர் | பிறக்கும்போதே பெற்றோரை குழப்பி விட்டேன் ; ராணி முகர்ஜி கலாட்டா | 130 பேருக்கு 10 கிராம் தங்கம் கொடுத்த கீர்த்தி சுரேஷ் | ஏழைகளுக்கு இலவச இருதய சிகிச்சை அறிவித்த பாலகிருஷ்ணா |
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்ட மசோக்களை எதிர்த்து தலைநகர் டில்லியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்திற்கு பாலிவுட் நடிகைகள் பிரீத்தி ஜிந்தாவும், பிரியங்கா சோப்ராவும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
ப்ரீத்தி ஜிந்தா டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது: இந்தக் குளிரிலும், தொற்றுக்கு நடுவிலும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் எனது அன்பு. நமது தேசத்தை இயங்க வைத்துக் கொண்டிருக்கும் நமது மண்ணின் போர் வீரர்கள் அவர்கள். அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை விரைவில் நல்ல முடிவை எட்டி பிரச்சினை தீர்க்கப்படும் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
நடிகை பிரியங்கா சோப்ரா டுவிட்டரில் கூறியிருப்பதாவது: நமது விவசாயிகள் தான் இந்தியாவின் போர் வீரர்கள். அவர்களது பயத்தைப் போக்க வேண்டும். அவர்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட வேண்டும். ஜனநாயக நாடான நாம் இந்தப் பிரச்சினை மிக விரைவில் சரி செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.