த்ரிஷாவின் ‛தி ரோடு' படத்தின் டிரைலர் வெளியானது | ‛லியோ' ஹிந்தி போஸ்டர் வெளியீடு : சஞ்சய் தத்துடன் ஆக்ரோஷமாக மோதும் விஜய் | என் மகள் மீரா மிகவும் அன்பானவள் தைரியமானவள்: விஜய் ஆண்டனி | அர்ஜுன் தாஸிற்கு பதிலாக ஆரவ் | உலகின் மிக அழகான பெண்ணுடன் நான் - அசோக் செல்வன் வெளியிட்ட பதிவு! | ராதே ஷ்யாம் இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | திடீரென்று ஹேர் ஸ்டைல் மாற்றிய எமி ஜாக்சன்! | திருமணம் பற்றிய செய்தி - வதந்தி என ‛லியோ' ஸ்டைலில் த்ரிஷா பதில் | 'விக்ரம், பிஎஸ் 2, ஜெயிலர்,' படங்கள் ஹிந்தியில் வரவேற்பு பெறாதது ஏன் ? | பாலிவுட்டில் தாக்கு பிடிப்பாரா ராஷ்மிகா? |
ஓம் ராவத் இயக்கத்தில், பிரபாஸ், சைப் அலிகான், தீபிகா படுகோனே மற்றும் பலர் நடிக்க உள்ள படம் 'ஆதி புருஷ்'. ராமாயணக் கதையாக உருவாக உள்ள இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ், ராவணன் கதாபாத்திரத்தில் சைப் அலிகான், சீதா கதாபாத்திரத்தில தீபிகா படுகோனே ஆகியோர் நடிக்க உள்ளார்கள்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள சைப் அலிகான், “ராவணன் கதாபாத்திரத்தை மனிதாபிமானத்துடனும், சீதாவை ராவணன் கடத்தியதையும், ராமருடனான போரை நியாயப்படுத்தியும் இப்படத்தின் இயக்குனர் ஓம் ராவத் எழுதியுள்ளார்,” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு சில இந்து அமைப்புகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்தன. அதைத் தொடர்ந்து தன்னுடைய பேச்சை வாபஸ் பெறுவதாக ஒரு அறிக்கை மூலம் சைப் தெரிவித்துள்ளார்.
“நான் அனைவரிடமும் மனமார மன்னிப்பு கேட்பதோடு, நான் சொன்னதை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். கடவுள் ராமர் எப்போதும் நீதி மற்றும் வீரத்தின் அடையாளமாக இருந்து வருகிறார். 'ஆதிபுருஷ்' படம் தீமைக்கு எதிராக, வெற்றியைக் கொண்டாடும் படமாக அமையும். மொத்த குழுவினரும் ஒரு காவியத்தை எந்தவிதமான சிதைவும் இன்றி கொடுக்க ஒன்றிணைந்து பணியாற்றி வருகிறார்கள்,” எனத் தெரிவித்துள்ளார்.