சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
கொரோனா தாக்கம் குறைந்து விட்டது போன்று, தற்போது ஒரு தோற்றம் இருந்தாலும், இன்னும் அதன் வீரியம் குறையவில்லை என்பது, நாளுக்கு நாள் நிரூபணமாகி வருகிறது. அந்தவகையில் பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோல், தற்போது கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.. சமீபத்தில் தோல்பட்டை பகுதியில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட சன்னி தியோல், ஓய்வு எடுப்பதற்காக மணாலிக்கு சென்றுள்ளார்.
அங்கே தனக்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்படவே, அங்கிருந்த மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அதில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. இதனால் அங்கேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு, மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் சன்னி தியோல், கொரோனா தாக்கத்திலிருந்து குணமான பின்பே, மும்பை திரும்புவேன் என குறிப்பிட்டுள்ளார்.