மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இதுதவிர தனது சினிமா வருமானத்தை பல்வேறு வழிகளில் முதலீடு செய்து வருகிறார். அவற்றில் முக்கியமானது கிரிக்கெட் அணி. நடிகை ஜூகி சால்வாவுடன் இணைந்து ஐபிஎல் கிரிக்கெட்டில் கோல்கட்ட நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளராக உள்ளார். இந்த நிறுவனம் தற்போது அமெரிக்க கிரிக்கெட்டிலும் கால் பதிக்கிறது.
உலகம் முழுக்க கிரிக்கெட் பிரபலமாக இருந்தாலும் அமெரிக்காவில் கிரிக்கெட்டுக்கு மவுசு இல்லை. இதனால் அமெரிக்காவிலும் கிரிக்கெட்டை பிரபலப்படுத்த அமெரிக்கன் கிரிக்கெட் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் முயற்சித்து வருகிறது. இந்த நிறுவனத்துடன் ஷாருக்கான் நிறுவனம் கைகோர்த்துள்ளது. அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடும் லாஸ் ஏஞ்சல்ஸ் கிரிக்கெட் அணியை ஷாருக்கான் வாங்கி இருக்கிறார்.