சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
ஹிந்தித் திரையுலகின் வாரிசு நடிகர்களில் முக்கியமானவர் சஞ்சய் தத். பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள சஞ்சய் தத், சில மாதங்களுக்கு முன்பு நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைகளை மேற்கொண்டார்.
சிகிச்சைகளுக்குப் பின் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். படப்பிடிப்புக்காக ஐதராபாத்திற்கு வந்து தங்கியுள்ளார் சஞ்சய் தத். அவர் தங்கியுள்ள அதே ஹோட்டலில் மற்றொரு படத்தின் படப்பிடிப்புக்காக கங்கனா ரணவத்தும் தங்கியுள்ளார்.
சஞ்சய் தத் தான் தங்கியுள்ள ஹோட்டலிலேயே தங்கியிருப்பது தெரிந்ததும், அவரைச் சென்று சந்தித்திருக்கிறார் கங்கனா. இந்த சந்திப்பு குறித்து “இருவரும் ஐதராபாத்தில் ஒரே ஹோட்டலில் தங்கியிருக்கிறோம் என்று தெரிந்ததும் இன்று காலை சஞ்சு சாரைச் சென்று சந்தித்து அவரது உடல்நலம் பற்றி விசாரித்தேன். அவர் இன்னும் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். நீங்கள் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ நாங்கள் பிரார்த்திக்கிறோம்,” என்று தெரிவித்துள்ளார்.