மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
பாகுபலி உள்ளிட்ட பிரம்மாண்டமான பல படங்களுக்கு கதை எழுதியவர் பிரபல கதாசிரியரும் இயக்குனர் ராஜமௌலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத். இந்தநிலையில் தற்போது தெலுங்கு இளம் ஹீரோ பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ், இந்தியில் முதன்முதலாக அறிமுகமாக இருக்கும் படத்திற்கு விஜயேந்திர பிரசாத் தான் கதை எழுதுகிறார். அதேசமயம் இது ஒன்றும் புதிய கதை அல்ல..
ஏற்கனவே 15 வருடங்களுக்கு முன்பு ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் இவர் எழுதிய சத்ரபதி படத்தின் கதையைத்தான் ரீமேக் செய்யப்போகிறார்களாம். இருந்தாலும் இந்திக்கு ஏற்றபடி இந்த கதையில் நிறைய மாற்றங்களை செய்து வருகிறாராம் விஜயேந்திர பிரசாத். பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸின் ஆக்சன் படங்கள் தெலுங்கில் பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும், இந்தியில் டப்பிங் ஆகும் அவரது படங்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதை தொடர்ந்து, இந்தியில் நேரடியாகவே அடி எடுத்து வைக்கிறார் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ்.