மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் சில காலம் சினிமாவை விட்டு விலகி ஓய்வெடுக்கப்போவதாக சஞ்சய்தத் அறிவித்தார். சஞ்சய் தத் உடல் மெலிந்து காணப்பட்ட ஒரு புகைப்படம் இணையத்தில் பரவியது. இது அவரது ரசிகர்கள் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
கடைசியாக சஞ்சய் தத் நடிப்பில் சடக் 2 திரைப்படம் ஓடிடியில் வெளியானது. கே.ஜி.எப் 2 படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்து வந்தார். கொரோனா காலத்திற்கு பிறகு இந்த படத்தில் மீண்டும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் தான் அவர் ஓய்வை அறிவித்தார்.
கொரோனா அச்சுறுத்தலுக்கு முன்பாக 'டோர்பாஸ்' என்ற படத்தில் சஞ்சய் தத் நடித்திருந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக படம் வெளிவரவில்லை. தற்போது இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் டிசம்பர் மாதம் வெளியாகிறது.
இந்நிலையில் இப்படம் குறித்து சஞ்சய் தத் கூறியுள்ளதாவது : கடந்த சில மாதங்களாக ரசிகர்களின் அன்பு மற்றும் ஆதரவுக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இந்த திரைப்படத்தின் மூலம் மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. எல்லைகள் தாண்டிய அதிர்வலைகளை உண்டாக்கக் கூடிய இப்படம் உலகம் முழுவதுமுள்ள நல்ல பார்வையாளர்களை சென்றடையும் என்று நம்புகிறேன். என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதன் மூலம் சஞ்சயத் வேகமாக குணமடைந்து வருவது தெரியவருகிறது. இன்னும் சில நாட்களில் அவர் கே.ஜி.எப் 2வில் நடிக்கலாம் என்று தெரிகிறது. சஞ்சய் தத்தின் உடல்நிலையை கருத்தில் கொண்டு கே.ஜி.எப் படத்தில் அவரது காட்சிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.