முதல்வர் வெளியிட்ட எம் ஜி ஆர் பாடல் | 18ஆம் வருடத்தில் ஒக்கடு ; மகேஷ்பாபு மனைவி மீது தயாரிப்பாளர் வருத்தம் | விரைவில் சுரேஷ்கோபியின் ஒத்தக்கொம்பன் ஆரம்பம் | சோனு சூட்டின் ரொமான்ஸ் இசை ஆல்பம் வெளியானது | பிப்ரவரியில் அடுத்தடுத்து வெளியாகும் பார்வதியின் 2 படங்கள் | விஜய்சேதுபதியின் எழுத்தாளர் அவதாரம் | சொர்க்கத்தில் 1௦௦ நாட்கள் ; அமிதாப்பிற்கு புதிய பொறுப்பு | லூசிபர் தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா | விஜய்-65வது படத்திலும் வில்லனாகும் பிரபல ஹீரோ | நயன்தாரா பாணியில் செயல்பட்ட வனிதா விஜயகுமார் |
பிரபல பாலிவுட் நடிகர் அக்சய் குமார் மீது, தான் நடத்தி வந்த யூடியூப் சேனல் மூலமாக அவதூறாக செய்தி வெளியிட்டார் ரஷீத் சித்திக் என்பவர். குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரணம் அடைந்த சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் காதலி ரியா சக்கரபோர்த்தி, கனடாவுக்கு தப்பிச்செல்ல அக்சய் குமார் உதவி செய்ததாக ஆதாரமற்ற செய்தியை அவர் வெளியிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து அக்சய் குமார் ரஷீத் சித்திக் மீது 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்
இந்தநிலையில் தன் மீது தொடுக்கப்பட்ட வழக்கை அக்சய் குமார் திரும்ப பெற வேண்டும் என்றும் விதிமுறைகளுக்கு மாறாக தன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும், ஏற்கனவே அக்சய் குமார் குறித்து பல மீடியாக்களில் வெளியான செய்திகளை தான், தனது சேனலின் வெளியிட்டதாகவும் குறிப்பிட்டுள்ள ரஷீத் சித்திக், அந்த வீடியோவில் எந்தவிதமான தனி மனித தாக்குதலும் இல்லை என புலம்பியுள்ளார்